மும்பை போலீஸ் நடிகை கங்கனாவுக்கு சம்மன்

mumbai-police-notice-to-actress-kangana-ranaut
Kangana Ranaut

மும்பை போலீஸ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரிக்கு தேசதுரோக வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பி விட்டதாக ஏஎன். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் மற்றும் போதைபொருள் நடமாட்டம் தொடர்பாக மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என  பாலிவுட் நடிகை கங்கனா விமர்சனம் செய்தார். எனவே கங்கனாவுக்கும் மும்பை அரசுக்கும் இடையில் மோதல் உண்டானது. இதனால் கங்கனாவின் உயிருக்கு ஆபத்து இருக்கு என மத்திய அரசு  அவருக்கு பாதுகாப்பு அளித்தது. 

இந்த நிலையில் மும்பை போலீஸ் சம்மன் கங்கனாவுக்கும் அவரது சகோதரிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. அக்டோபர் 26 மற்றும் 27 தேதிகளில் மும்பை போலீஸ் அவர்களிடம் விசாரணை செய்யும் என தெரிகிறது.

மேலும் மும்பை கோர்ட் உத்தரவுப்படி கங்கனா மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.