நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு

annamalai-acted-movie-teaser-postponded
நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  'அரபி' கன்னட சினிமாவில் நடித்து முடித்துள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு கைககளும் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை புரிந்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படுகிறது.

இதில் விஸ்வாசே, நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக, அண்ணாமலை நடித்துள்ளார்.இந்த கதையை கேட்டதும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று, நடித்து கொடுத்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுஉள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த நிலையில் 'அரபி' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த அரபி படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.