திருப்பதிக்கு திடீர் விசிட் காதல் ஜோடி

vignesh-sivan-nayanthara-pays-a-surprise
விக்னேஷ்

நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து திருப்பதியிலிருந்து அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார். காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று ரசிகர்கள் பதிவிட்டு, இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.