பல கோடி ரூபாய் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா.. பின்னணி?

actress-anushka-shetty
பல கோடி ரூபாய் வீட்டை விற்கும் நடிகை அனுஷ்கா.. பின்னணி?

தமிழ், தெலுங்கு மொழிகளில் செம பிஸியாக இருந்தவர் அனுஷ்கா. ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தபோது உடல் எடையை கூட்டினார். அப்போதிருந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் எதுவுமே இல்லாமல் இருந்தது. பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் முன்னர் போல் பிஸியெல்லாம் ஆகவில்லை. இந்நிலையில் அவர் வீட்டை விற்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வைத்திருந்தவர் அனுஷ்கா. முதல் படத்திலேயே மிகப்பெரிய ஸ்டாரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாகும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். கிளாமர், ஹோம்லி என எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடிய அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயினாகவும் ஜொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி இடுப்பழகி: அனுஷ்கா மட்டும் அதே ஃபார்மில் தொடர்ந்திருந்தால்; இப்போது நயன்தாரா எடுத்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்குத்தான் சென்று இருக்கும். அந்த அளவுக்கு பிஸியாக இருந்தார். வெறும் கவர்ச்சி மட்டுமின்றி கதைக்கும், தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து அசத்தினார். அப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த இஞ்சி இடுப்பழகி படம் வினையாக அமைந்தது. அதில் கதைக்கு தேவைப்பட்டதால் தனது உடல் எடையை கூட்டினார்.

ஹீரோயின்களில் ஃபர்ஸ்ட்: கதைக்காக உடல் எடையை கூட்டுவது எல்லாம் பெரும்பாலும் நடிகர்கள்தான் செய்வார்கள். ஹீரோயின்கள் தங்களது உடல் எடையை அதிகரிப்பதை எப்போதும் விரும்பமாட்டார்கள். அனுஷ்காவோ அதை தைரியமாக செய்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அந்தப் படம் அனுஷ்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் தனது எடையையும் குறைக்க முடியாமல் தவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் எதுவுமே இல்லாமல் இருந்தார். எனவே மீண்டும் நடிக்க மாட்டார் என்று பலரும் பேசிய நிலையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். படம் ஃபீல் குட் படமாக இருந்தது. வணிக ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.அவருக்கும் நல்ல ஒரு ரீ என்ட்ரியாக அமைந்தது. அடுத்ததாக காதி படத்தில் நடித்தார். அது தோல்வியடைந்தாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. ஆனால் ஒர்க் அவுட் ஆகவில்லை.

வீட்டை விற்கும் அனுஷ்கா?: அடுத்ததாக காத்தனார் என்ற மலையாள படத்தில் கமிட்டானார். அது இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அவருக்கு 12 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை விற்கும் முடிவுக்கு ஸ்வீட்டி அனுஷ்கா வந்திருப்பதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்?: ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு பகுதியில் வீடு வாங்குவதற்காக அவர் விற்கிறார் என்று சிலரும், விரைவில் திருமணம் செய்யப்போவதால்; இதை விற்றுவிட்டு; சினிமாவிலிருந்தும் விலகிவிட்டு மொத்தமாக கணவருடன் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக பிளான் செய்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் விற்கிறார் என்றும் கூறுகிறார்கள். அதேசமயம் இன்னும் சிலரோ, 'அதெல்லாம் இல்லை.. அனுஷ்காவுக்கு சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பண கஷ்டம் வந்துவிட்டது அதனால்தான் விற்கிறார்' என்றும் சொல்கிறார்கள்.