இன்றைய ராசி பலன்கள் - (21-11-2026 சனி கிழமை)
மேஷம்
பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
உற்றார், உறவினர்கள் தோள் கொடுத்து உதவுவர். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம்
குடும்பத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.
கடகம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். புது தொழில் யோகம் அமையும்.
சிம்மம்
மனதில் புது தெம்பும், துணிச்சலும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சொல்லும் படி இருக்கும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
கன்னி
குடும்ப பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பணம் வரவு சிறிது தாமதமாகும். வீண் வாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு
துலாம்
விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். நண்பர்களுடன் சின்ன மனக்கசப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
விருச்சிகம்
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.
தனுசு
எதிர்ப்புகளை திறமையாக சமாளிக்க முடியும். உடல் நலம் பலம் பெரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்
எதிர்காலம் பற்றி நிறைய திட்டங்கள் இருக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
கும்பம்
குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
மீனம்
மனதில் புதிய எண்ணங்கள் உதிக்கும். பொருளாதார நிலை உயரும். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.