தரையில் அழுது புரண்ட நடிகை ரோஜா.. தண்ணீர் கொடுத்தவரின் கன்னத்தில் பளார்!.
சூர்யாவின் 'சீன்' திரைப்படம் எப்படி இருக்கு?
எல்லாரும் நல்லா சொல்றாய்ங்களேன்னு சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் சீன் படத்திற்கு இன்று போனேன். தொடர் கொ>>>கள் செய்யும் சைக்கோ கில்லர் ஒருவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார் போலீஸ் ஆபிசர் சூர்யா. அது நடந்து சில வருடங்கள் பின் அது போலவே பாணியில் சில கொ>>>கள் நடக்கிறது, இம்முறை சூர்யாவால் அதை கண்டுபிடிக்க முடியாத நிலை, வேலையில் அக்கறை இல்லாமல் ஏனோ தானோ வென்று இருக்கிறார்,பிறகுதான் அவருக்கு கண்ணு தெரியல அதுனாலதான் வேலையில ஆர்வமில்லனு தெரியுது.
முதலில் இது தெரியாமல் சூர்யாவை இக்கேஸை கண்டுபிடிக்க வற்புறுத்தும் உயரதிகாரி லால் பின்பு இந்த விசயம் தெரிந்ததும் வேண்டாம்பா நீ சும்மா இரு என்கிறார். இருப்பினும் நான் சும்மா இருக்க மாட்டேன் கண்டுபிடிப்பேன் என கண் தெரியாத சூர்யா சொல்கிறார். பிறகு எப்படி அந்த சைக்கோ கில்லரை பிடித்து அழித்தார் என்பது கதை.
ஓபனிங்கில் ஒரு மாதிரியாக ஆரம்பிக்கும் கதை அப்படியே தொய்வாகவே செல்கிறது. இடைவேளைக்கு பிறகு நல்லா இருக்கும் என்றார்கள், ஆனால் இடைவேளைக்கு பிறகும் அரைமணி நேரத்துக்கிட்ட தொய்வா தான் போனது. அப்புறம் தீடீர் என வேகமெடுக்கிறது கதை. கடைசி சில நிமிடங்கள் கொஞ்சம் வேகம் அதுவரை நமக்கு சோகம்தான்.
எல்லாரும் நல்லாருக்கும்னு சொல்றப்ப ப்ளூ சட்டை மாறன் மட்டும் நல்லா இல்லனு சொன்னப்ப லைட்டா டவுட்டு வந்துச்சு, இருப்பினும் அவர் அளவுக்கு மிக மோசம் என்று சொல்ல விரும்பவில்லை. படம் சுமார், அப்போ படம் சூப்பர்னு தகவல் வருதே அப்டீன்னா இன்னைக்கு நிலைமைக்கு பத்திரிக்கைகளில் விமர்சனம் எழுதுறவன்லாம் கொஞ்ச வயசு பையன் அதாவது 2000க்கு பின் பிறந்தவன் தான் பெரும்பாலும் எழுதுறான், அவய்ங்களை கவர்வது மாதிரி சில விசயங்களை படத்துல வைத்து விடுவதால் சூப்பர்னு சொல்லிடுறான், மற்றபடி ஒரு படம் திரைக்கதையாக எப்படி இருக்கணும், எப்படி கதையை கொண்டு போகணும் ஒரு சஸ்பென்ஸ் கதை, ஹாரர் கதை மக்களை கவரும் விதமா சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அளவுக்கு கொண்டு போக இப்ப இருக்க பெரும்பாலான இயக்குனருக்கு தெரியல, ஆனால் இப்படி சுமாரான கதைகளையே சூப்பர் என இப்ப இருக்கிற யங்ஸ்டர்ஸ் புகழ்ற நோக்கம் தான் என்னனு தெரியல. இதுவரைக்கும் எவனும் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்களே பார்த்ததே இல்ல போல.
எவ்வளவோ திரைக்கதை அட்டகாசமான படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் வந்திருக்கு இதை போய் எப்படி சைக்கோ த்ரில்லர்னு சொல்றான்னு தெரியல், ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை மாதிரி பல காட்டு மொக்கை படங்களுக்கு இது பரவாயில்லை என்று சொல்லலாம், அப்படி நினைத்துதான் சொல்கிறார்கள்.
படத்தின் ஒன்லைன் படி நல்ல கதைதான், ஒரு கண் தெரியாத ஹீரோ ஒரு சைக்கோ கில்லரை தேடி கண்டுபிடிப்பது என்பது பரபரப்பை இன்னும் கூட்டியிருக்க வேண்டிய விசயம், இப்படிப்பட்ட கதையில் எதற்கு இயக்குனர் நகைச்சுவையா இதை பண்ணனும்னு நினைத்தார் என்று தெரியல, நகைச்சுவையும் எல்லாம் டார்க் காமெடி என்று சொல்லக்கூடிய காமெடிதான்.
முன்னொரு காலத்தில் இதே சூர்யாவின் தம்பி நடித்த நான் மகான் அல்ல என ஒரு படம் வந்துச்சு, விஷ்ணு விஷால் நடித்த ராட்சஷன் படம் வந்துச்சு, இதெல்லாம் சைக்கோ கில்லர் படம்தான், எப்படி இருந்துச்சு, பார்க்க பரபரப்பா இருந்துச்சா அப்படி ஒரு பரபரப்பு இந்த படத்தில் இல்லவே இல்லை, ஹீரோ வித்யாசமா அறிவியல் பூர்வமா யோசித்து சில சைக்கோ கொலைகளை பண்றார்.
அவர் பண்ற கொலைகளுக்கும் ஆழ்ந்த அழுத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை, அவரை பார்க்கவும், சாக்லேட் பாய் மாதிரிதான் இருக்கிறாரே தவிர பயம் என்பது துளியும் வரவில்லை, இது போல படங்களில் வில்லனே சரியில்லாவிட்டாலும் அவர் காட்சியை த்ரில்லிங் பிஜிஎம் பேலன்ஸ் பண்ணி சரி ஆக்கிவிடும், இதுல சூர்யா, வில்லனை தேடும் காட்சிகளில், அவருடன் அவருக்கு நஸ்ரியா உதவும் காட்சிகளிலும், சூர்யாவை வில்லன் தொடரும் காட்சிகளிலும் பெரிய பரபரப்பு என்பதே இல்லை, சும்மா ரொமாண்டிக்தனமான மியூசிக்கை போட்டு வைத்திருக்கிறார்கள், டார்க் காமெடி என்ற பெயரில் கண்டதுக்கு எல்லாம் சிரிக்கிறார்கள், சிரிப்பு என்பது ஒரு உணர்வு எப்படி இதையெல்லாம் ரசிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
இதெல்லாம் தெரியாமல் இவர்கள் செய்யவில்லை, இப்படியெல்லாம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இதுவரை இல்லாத அளவில் வித்யாசமா காட்ட வேண்டும் சஸ்பென்ஸ் படங்களின் இலக்கணங்களை உடைக்க வேண்டும் என என இதையெல்லாம் தெரிந்தே வேண்டுமென்றே செய்து காண்பித்திருக்கிறார்கள்.
இப்ப இருக்குற இளசுகள்ல பாதி பேர் இது போல கிறுக்குத்தனத்தை தான் ரசிக்கிறான், அவனுகளோட ஆதரவுல படத்தையும் ஓட்டிடுறானுக, இது என்ன சஸ்பென்ஸ் த்ரில்லர் என கடைசி வரைக்கும் எனக்கு தெரியல.
பெரும்பாலானவர்கள் இதே போன்ற கதை சாயலில் உள்ள ப்ளைண்ட் டிடெக்டிவ் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள், இயக்குனர் ராம்பாலா சாரும் இந்த படத்தை பரிந்துரைத்தார். தமிழிலும் இது போல பல படங்கள் வந்திருக்கிறது இரவு சூரியன் என்று முரளி நடித்த படம் ஒன்று வந்துள்ளது. பார்வையற்றவர்களின் புத்திசாலித்தனம் அவர்களின் தொடு திறன் உணர்வை இன்னும் நன்றாக காண்பிக்க ஸ்கோப் உள்ள படம், பார்வையற்றவர்களை புத்திசாலியாக காண்பித்து இன்னும் இந்த படத்தை நல்ல சஸ்பென்ஸ் படமாகவே கொண்டு சென்றிருக்கலாம், எதற்கு இந்த காமெடி டைப்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.
நந்தாவில் நடித்த சின்ன வயசு சூர்யாவாக வரும் நடிகர் நான் மகான் அல்ல என்ற படத்தில் அவர் பெயர் வினோத்னு நினைக்கிறேன், சின்ன பையன் தான் சும்மா கலக்கு கலக்குனு கலக்கிருப்பாப்ல, அது மாதிரியாலாம் வில்லன் இல்ல, 100 கொ**கள் பண்ணிட்டு வில்லன் அசால்டா ஏமாத்திட்டு திரியுறானு சொல்றதெல்லாம் காதில் பெரிய பூச்சுற்றல்.
எனக்கு தெரிந்து பெரிய மைனஸ் ஒரு சைக்கோ கில்லரை பிடிக்க போகும் அதிகாரி அடுத்தடுத்து பரபரப்பாக பாய்ந்து ஸ்கெட்ஸ் போட்டு பிடிப்பது போல காட்டி இருக்கலாம், அவருக்கு கண் தெரியாது என காண்பிப்பதிலேயே ஹீரோயிசம் அமுங்கி விடுகிறது. நாயகியாக வரும் நஸ்ரியாதான் ஒரு காட்சியில் சூர்யாவையே காப்பற்றுகிறார். கடைசி வரை சூர்யா வில்லனை அடிக்க மிகுந்த சிரமப்பட்டுதான் நடிக்கிறார்.
இதில் யங்ஸ்டர்ஸ் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரை குறிவைத்து இன்ஸ்டா பிரபலங்கள் லுங்கி பாய்ஸ் ராஜ்ப்ரியன், ஹரிராஜன் போன்றோரை நடிக்க வைத்திருக்கிறார்கள் அவர்கள் வரும் காட்சிகள் ஓக்கே. இது போல இன்னும் சில இன்ஸ்டா பிரபலங்களையும் போற போக்கில் நடிக்க வைத்திருக்கிறார்கள் இவர்களின் நோக்கமே இன்ஸ்டாவில் சுற்றி திரியும் இளசுகளை கவர வேண்டும் என்பதுதானே தவிர நல்ல தெளிவான படத்தை கொடுக்க வேண்டும் என்பதில்லை. இளையராஜா 1000 படங்களுக்கு மேல இசையமைச்சிட்டாரு, எத்தனையோ உணர்வுகளுடன் விளையாடக்கூடிய பாடல்களை கொடுத்திருக்காரு, எத்தனை படத்துலதான் இந்த தென்றல் வந்து தீண்டும்போது பாட்ட வைப்பிங்க வேற எத்தனையோ பாட்டு இருக்கேயா எத்தனையோ சூப்பர் ஹிட் பாட்டு இருக்கேயா என்னய்யா போங்கய்யா.
கடைசி அரைமணி நேரம் படம் ஓக்கே மற்றபடி 2 மணி நேரம் படம் தடுமாறுகிறது. இதுல கண்பார்வை தெரியாத அதிகாரி சூர்யாவின் அப்பா ஆனந்தராஜ் ஒரு மெண்டல், அம்மா குடிகாரி, காதலி மற்றும் உதவியாளராக வரும் நஸ்ரியாவுக்கு சிறுவயது அம்மா மறைந்த பாதிப்பால், கை நடுக்கம் வரும், நாயகன் சூர்யாவுக்கு கண் தெரியாது, ஏன் இப்படி எல்லாரையும் நோயாளர்களாக காண்பித்திருக்கிறார்கள் என்ன நோக்கம் இயக்குனருக்கு இதுவே ஒரு சைக்கோத்தனமாதான் இருக்கு, இவர்களை வைத்து அந்தக்கால நெஞ்சில் ஓர் ஆலயம், நீர்க்குமிழி படம் மாதிரியாவது எடுத்திருக்கலாம் அவ்வளவு நோய்கள் இவர்களுக்கு.
ஒண்ணு நல்ல பரபரப்பு பிஜிஎம் போட்டு ராட்சஷன் மாதிரி பரபரப்பா எடுத்திருக்கணும், இந்த மாதிரி கதைகள் எத்தனை வந்தாலும் மக்கள் ரசிப்பாங்க, இல்லனா முற்றிலும் காமெடியாவே எடுத்திருக்கணும். படத்தில் காமெடியான வசனங்கள் எழுதி இருப்பது பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், எதுக்குமே சிரிப்பு வரல வறட்டு காமெடிதான் அவங்க எழுதுனத அவங்கதான் ரசிச்சுக்கணும் ஆனா இளசுகள் இதை சூப்பர் என்கிறார்கள்.
இந்த படம் ஓரளவு ஓக்கே ஆஹா ஓஹோன்னு புகழ்ற அளவுக்கு ஒண்ணுமில்ல ஒரு டைம் பார்க்கலாம். இயக்குனரே அழகா யோசித்த ஒரு சஸ்பென்ஸ் கதையை யங்ஸ்டர்ஸ்க்கு பிடிக்கும்னு கொத்து பரோட்டா போட்டு வச்சது மாதிரி , அதுவும் கொத்த தெரியாதவன் அம்மிக்கல்லை கொத்தியது போல் உள்ளது. அதையும் மீறி ஆஹா ஓஹோ என்றால் அது உங்கள் ரசனை, என் ரசனை தரமில்லாத ரசனையாகவே இருந்துட்டு போகட்டும் ஏனென்றால் உண்மையை மட்டும்தான் என்னால் பேச முடியும்.
சரி வாங்க எல்லாரும் வரிசையில் வந்து திட்டுங்க கமான், தீபாவளியன்னைக்கு உங்ககிட்ட திட்டுவாங்கத்தான் வேணும்னு ஆண்டவன் என் தலையில் எழுதி இருந்தா அதை மாத்த யாரால முடியும்.