மாதம்பட்டி ரங்கராஜை மறக்காத முதல் மனைவி!

mathampatti-rangaraj-wife
மாதம்பட்டி ரங்கராஜை மறக்காத முதல் மனைவி!

மாதம்பட்டி ரங்கராஜும், ஸ்ருதியும் திருமணம் செய்து இரண்டு மகன்களையும் பெற்றார்கள். ஆனால் ரங்கராஜோ இரண்டாவதாக ஜாய் கிரிஸில்டாவை ரகசிய திருமணம் செய்துகொண்டார். நீண்ட பிரச்னைக்கு பிறகு இப்போது அவர், ஜாய் கிரிஸில்டா, மகன் ராகா ஆகியோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் மாதம்பட்டியின் முதல் மனைவி ஸ்ருதி தனது கணவர் குறித்து புகழ்ந்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். அதில் ஓரளவுக்கு நல்ல நடிப்பையே கொடுத்திருந்தார். அதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று கணிக்கப்பட்டது. அவரோ வெள்ளித்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டு சின்னத்திரையில் நடுவராக இருக்கிறார். அந்த நிகழ்ச்சியின்போதுதான் ஜாய் கிரிஸில்டாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டதாக சிலர் சொல்வது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேருக்கும் இரண்டாவது: இந்தத் திருமணம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மட்டுமில்லாமல் ஜாய் கிரிஸில்டாவுக்குமே இரண்டாவது திருமணம்தான். என்ன ஒன்று ரங்கராஜ் முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்கவில்லை; ஜாய் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார். இவ்வளவுதான் வித்தியாசம். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயான ஜாய்; மாதம்பட்டி மூலம் மீண்டும் கர்ப்பமானார். ஆனால் ரங்கராஜோ ஜாய் கிரிஸில்டாவை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

பெரிய போராட்டம்: இதை எதிர்பார்க்காத இரண்டாவது மனைவி பொதுவெளிகு வந்து சட்டப்போராட்டம் நடத்தினார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தையையும் ரங்கராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. மனைவியோ அந்தக் குழந்தைக்கு ரங்கராஜின் பெயரையும் சேர்த்து ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்தார். பிறகு நடத்தப்பட்ட டி.என்.ஏ டெஸ்ட்டில் அந்தக் குழந்தை ரங்கராஜுக்கு பிறந்ததுதான் என்பது உறுதியானது. இதனால் இப்போது அவர்கள் இரண்டு பேரையும் தன் பொறுப்பில் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்: அவர்களை ஏற்றுக்கொண்டதாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ராகா ரங்கராஜுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தங்களது வீட்டில் வைத்து உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டியது அந்தத் தம்பதி. அதுகுறித்த பதிவுகளை ஜாய் கிரிஸில்டா மகிழ்ச்சியோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்து முதல் மனைவி ஸ்ருதி ட்ரிகர் ஆகிவிட்டார் போல. அவரும் தன் பங்குக்கு மாதம்பட்டியோடு துரைமுருகன் பேத்தி திருமணத்டுக்கு சென்ற ஃபோட்டோக்களை ஷேர் செய்திருந்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ஸ்ருதியின் த்ரோபேக் பேட்டி ஒன்றும் திடீரென இப்போது ரவுண்ட்ஸில் இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது குறித்து பேசுகையில், "அனைத்து மனைவிகளுக்கும் அவர்களது கணவரை எவ்வளவு பிடிக்குமோ அதே மாதிரிதான் எனக்கும் என் கணவரை பிடிக்கும். அவர் என்னை ரொம்பவே சுதந்திரமாக இருக்க வைப்பவர். நானே வளர்வதற்கு அவர் உதவியாக இருந்தார்" என்றார்.

பனிப்போர்?: முன்னதாக, ஜாய் கிரிஸில்டாவை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஸ்ருதியும் தன் பங்குக்கு கணவரை புகழ்வதும், கொண்டாடுவதும் அதிகமாகியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜாய்க்கும், ஸ்ருதிக்கும் இடையே ஒரு பனிப்போரே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.