கவுண்டமணியால் காணாமல் போன நடிகை ஷர்மிலி!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் கவுண்டமணி. இவருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிலி. இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கவுண்டமணியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பல பெரிய திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டேன், அவரால் என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என பேசி உள்ளார்.
நடிகை ஷர்மிலி: இந்த பேட்டியில் ஷர்மிளா, நான் காமெடி சைடுக்கு போய் என்னுடைய எதிர்காலத்தை நானே கெடுத்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே நான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க சென்றிருக்க கூடாது. விஜயகாந்துடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க முடியுமா என்று கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். கவுண்டமணி என்னிடம் வந்து, என்னுடன் ஒரு படத்தில் நடிக்கிறியா என்று கேட்டார். அதற்கு நான், நோ, நோ, நோ... காமெடியெல்லாம் பண்ண மாட்டேன், எனக்கு அதெல்லாம் வராது என்று சொல்லிவிட்டேன். அவருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. எங்களுக்குள் வயது வித்தியாசமும் அதிகமாக இருந்தது. அதனால் அவருடன் நடிக்க வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன்
27 படங்களில்: ஆனால், அதன் பிறகு கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்ததால், ஒரு கட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவருடன் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவருடன் நடித்த அனைத்து படங்களும் பெருமளவில் வெற்றி பெற்றது. கவுண்டமணியுடன் நடித்ததன் மூலம் எனக்கும் ஒரு அடையாளம் கிடைத்தது. அவருடைய நகைச்சுவை மிகவும் பிரபலமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கவுண்டமணியுடன் மட்டும் 27 படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ந்து நடித்ததால் நிறைய படங்களை மிஸ் பண்ணிவிட்டேன். என்ன மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.
கவுண்டமணி டார்ச்சர்: சிரஞ்ஜீவி படத்தில் பாடல் காட்சிக்கு கமிட்டாகி இருந்தேன், ஆனால், அந்த படப்பிடிப்புக்கு போகவிடாமல் எனக்கு தொல்லை கொடுத்தார். சார் என்னுடைய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று கவுண்டமணியிடம் சொல்லியும், நான் தேதி கொடுத்துவிட்டேன். எனக்கு சிரஞ்ஜீவி படம் தான் முக்கியம் என்றால், 3 நாட்கள் படப்பிடிப்புக்கு ஆன செலவை கொடுத்துவிட்டுபோ என சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் அடுத்து 5 படங்களுக்கு கவுண்டமணியுடன் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன் அதையும் திரும்பி கொடுத்துவிட்டுபோ என சொன்னார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியாமல், சிரஞ்ஜீவி படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு அந்த பாடத்தில் சில்க் ஸ்மிதா டான்ஸ் ஆடி, அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இப்படி ரஜினி சாரின் ஒரு படத்தில் கமிட்டான போதும், கவுண்டமணி வேண்டும் என்றே பிரச்சனை செய்து அந்த படத்தில் நடிக்கவிடாமல் செய்துவிட்டார். இப்படி அவர் கொடுத்த தொல்லையால், தொடர்ந்து அவர் படத்தில் மட்டுமே நடிந்து வந்ததால், பத்திரிக்கைகளில் ஷர்மிலி கவுண்டமணி கூட மட்டும் தான் நடிப்பாங்க, மற்ற நடிகர்களுடன் நடிக்க மாட்டாங்க என்று கிசு கிசு எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வராமல் பொய்விட்டது. அப்போது தான் நான் துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து, கவுண்டமணியிடம் சார் நான் இனிமேல் உங்களுடன் நடிக்க மாட்டேன். கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு நான் தனியாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அந்த நாளில் இருந்து கவுண்டமணி என்னை மிகவும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அவர் நடிக்கும் படத்தில் ஒரு சின்ன காட்சியில் கூட என்னை போடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தார். இதனால், படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்படி கவுண்டமணி பல வேலைகளை செய்து என் வாழ்க்கையே கெடுத்துவிட்டார் என நடினை ஷர்மிலி ஆதங்கத்துடன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.