அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் திருப்பம்.. தலைமறைவான முத்துக்குமார் சரண்டர்.
மூக்குத்தி அம்மன் 2 ப்ரோமோஷனை தவிர்த்த நயன்தாரா.. பின்னணி என்ன?
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 நவம்பர் ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருடன் சினேகா, ரெஜினா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.
அதுகுறித்த காரணம் தெரியவந்திருக்கிறது.
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா; வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். அதற்கு பிறகு ஒருபக்கம் குடும்ப பொறுப்புகள், மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் நடித்த டாக்சிக், ஹாய் ஆகிய இரண்டு படங்களும் மோசமான தோல்வியை சந்தித்தன. இரண்டு படங்கள் அடுத்தடுத்து வந்து தோல்வியடைந்திருப்பதால் லேடி சூப்பர் ஸ்டார் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
மூக்குத்தி அம்மன் 2:
அடுத்ததாக அவர் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகத்திலும் அவர்தான் நடித்திருந்தார். அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க நம்பிக்கையை வைத்திருக்கிறார். இதில் அவருடன் ரெஜினா, சினேகா உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
தீபாவளிக்கு ரிலீஸ்:
பிரமாண்ட பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. அதில் இடம்பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள். கார்ட்டூன்கூட பரவாயில்லை போல; அந்த அளவுக்கு கிராஃபிக்ஸை சொதப்பி வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்:
ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவை சேர்ந்த அனைவரும் சிகப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்கள். டாக்சிக், ஹாய் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொண்டதால் இதிலும் நயன் கலந்துகொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அதுகுறித்த காரணம் தெரியவந்திருக்கிறது.
என்ன காரணம்?
அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் தர்மன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் நயன்தாரா. அதன் ஷூட்டிங் விடாமல் நடந்துவருகிறது. அந்தவகையில் நேற்றும் அதன் படப்பிடிப்பு நடைபெற்றதால்; மூக்குத்தி அம்மன் 2 ப்ரோமோஷனில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது இயக்குநர் சுந்தர்.சி. இந்தப் படத்துக்காக உங்களது பார்வை, அன்பு, அர்ப்பணிப்பை கொடுத்ததற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்துக்காக நான் என்றென்றும் அன்புடன் இருப்பேன்.
ரெஜினாவுடன் இந்தப் பயணத்தை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு எல்லா வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள். குஷ்பு, சினேகா உங்கள் இரண்டு பேருடனும் பணியாற்றியது எப்போதும் மனதில் பாதுகாக்கும் நினைவாக இருக்கும். இப்படிப்பட்ட அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்தப் பயணத்தை பகிர்ந்துகொண்டதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என புகழ்ந்திருந்தது.