தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடுக - பிரேமலதா விஜயகாந்த்.
மலையாள சினிமா வரலாறு - ரதிநிர்வேதம் முதல் ஷகீலா வரை!
மலையாள சினிமாவின் வரலாற்றை நாம் பேசும்போது பொதுவாக மம்மூட்டி, மோகன்லால், பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி, ஃபாசில் போன்றவர்களைப் பற்றித்தான் அதிகமாக பேசுவோம். ஆனால் மலையாள சினிமாவுக்குள் இன்னொரு சுவாரஸ்யமான வரலாறும் இருக்கிறது. ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய வணிக சக்திகளில் ஒன்றாக இருந்த பாலியல் சார்ந்த திரைப்படங்களின் வரலாறுதான் அது. இந்த வரலாற்றை 2000-களில் ஷகீலா திரைப்படங்களிலிருந்து தொடங்க முடியாது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் விதைகள் மலையாள சினிமாவில் விதைக்கப்பட்டுவிட்டன...
1978 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில், பத்மராஜன் எழுத்தில் வெளியான ரதிநிர்வேதம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு இளம் வயது சிறுவனுக்கும், அவனைவிட வயதில் மூத்த பெண்ணுக்கும் இடையிலான ஈர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் கதை அன்றைய காலத்தில் மிகவும் துணிச்சலானதாக இருந்தது. ஆனால் ரதிநிர்வேதத்தை வெறும் பாலியல் திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. பரதனின் இயக்கம், பத்மராஜனின் எழுத்து, ஜெயபாரதியின் நடிப்பு, கிருஷ்ணச்சந்திரனின் நடிப்பு, இசை என அனைத்தும் இணைந்து அந்த திரைப்படத்தை ஒரு சிறந்த திரைப்படமாக மாற்றியது......
அதே காலகட்டத்தில் வெளியான அவளுடைய ராவுகள் போன்ற திரைப்படங்களும் பாலியல் தொழில், பெண்களின் வாழ்க்கை, பாலியல் உறவுகள் போன்ற அன்றைய சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படாத விஷயங்களை திரைப்படங்களின் வழியாக மக்களிடம் கொண்டு சென்றன. இதன் மூலம் ஒரு முக்கியமான விஷயம் மலையாள சினிமாவுக்கு புரிந்தது. பாலியல் தொடர்பான விஷயங்கள் சமூகத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவற்றைப் பற்றிய திரைப்படங்களை பார்க்க மக்களிடம் மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது என்பதுதான் அது.....
இதன் பிறகு பாலியல் சார்ந்த விஷயங்கள் மெதுவாக மலையாள சினிமாவின் ஒரு வணிக அம்சமாக மாறத் தொடங்கியது. ஒரு திரைப்படத்தின் கதையில் பாலியல் உணர்வுகள் இருப்பது என்பதிலிருந்து, பாலியல் காட்சிகளும் கவர்ச்சியும் திரைப்படத்தை விற்பதற்கான முக்கியமான கருவியாக மாறியது. இதுதான் பின்னாளில் மலையாள சினிமாவில் தனியாக ஒரு B-Grade திரைப்பட சந்தை உருவாகுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது....
பெரிய நடிகர்கள் தேவையில்லை, மிகப்பெரிய பட்ஜெட் தேவையில்லை, பிரம்மாண்டமான செட்டுகள் தேவையில்லை. குறைந்த செலவில் ஒரு திரைப்படத்தை தயாரித்து, கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி, திரையரங்குகளுக்கு அவர்களை அழைத்து வந்தால் போதும். முதலீடு குறைவாக இருந்ததால், பெரிய நடிகர்களின் திரைப்படங்களைவிட இதுபோன்ற திரைப்படங்கள் சில நேரங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாப விகிதத்தையும் கொடுத்தன.
1980-களிலும் 1990-களிலும் இந்த சந்தை மெதுவாக வளர்ந்தது. இதனுடன் தென்னிந்திய சினிமாவில் சில நடிகைகளின் கவர்ச்சி பிம்பமும் ஒரு தனி வணிக சக்தியாக மாறியது. சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் ஒரு திரைப்படத்தில் இருப்பதே அந்த திரைப்படத்திற்கான ஒரு விற்பனை அம்சமாக மாறியது. ஆனால் மலையாள சினிமாவில் இந்த சந்தை மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வைத்தது 1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் தான்......
அந்த காலகட்டத்தில் ஷகீலா மலையாள சினிமாவில் ஒரு மிகப்பெரிய பெயராக மாறினார். குறிப்பாக கின்னாரத்தும்பிகள் போன்ற திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு ஷகீலா ஒரு நடிகை என்ற நிலையைக் கடந்து ஒரு தனி பிராண்டாக மாறினார். ஷகீலா பெயர் போஸ்டரில் இருந்தாலே ஒரு குறிப்பிட்ட வகையான பார்வையாளர்கள் அந்த திரைப்படத்தை பார்க்க வருவார்கள் என்ற நிலை உருவானது.
இதன் காரணமாக ஷகீலா நடித்த திரைப்படங்கள் மட்டுமல்லாமல், அவருடைய பெயரையும் கவர்ச்சியையும் மையமாக வைத்து பல குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தயாரிக்கத் தொடங்கின. ஷகிலாவை தொடரந்து சிந்து ரேஷ்மா பாபிலோனா போன்ற நடிகைகள் இந்த துறைக்குள் வந்தாலும் அவர்களால் ஷகிலாவின் உச்சத்தை அடயமுடியவில்லை. இந்த காலகட்டம்தான் பின்னாளில் “ஷகீலா அலை” என்று அழைக்கப்படும் அளவுக்கு பெரியதாக மாறியது.....
இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திரைப்படங்கள் வெறும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு வெளியே இயங்கிய சந்தையாக மட்டும் இருக்கவில்லை. சில நேரங்களில் அதே திரையரங்குகளில், அதே காலகட்டத்தில் மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுடன் போட்டியிடும் அளவுக்கு ஷகீலா திரைப்படங்கள் சென்றன. ஷகீலா திரைப்படங்கள் அந்த காலகட்டத்தில் மலையாள சினிமாவின் நட்சத்திர மைய வணிக முறைக்கு ஒரு வித்தியாசமான சவாலை கொடுத்தது...
ஒரு மம்மூட்டி அல்லது மோகன்லால் திரைப்படத்தை தயாரிக்க பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருந்த காலத்தில், ஒரு ஷகீலா திரைப்படத்தை அதைவிட மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடிந்தது. ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய வசூல் தேவைப்பட்ட நிலையில், ஒரு குறைந்த பட்ஜெட் ஷகீலா திரைப்படத்திற்கு குறைந்த வசூலே தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது.
இதனால் சில திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இது ஒரு வணிக வாய்ப்பாக இருந்தது. எந்த திரைப்படம் பெரியது என்பதைவிட, எந்த திரைப்படம் தங்களுடைய திரையரங்கிற்கு தொடர்ந்து பார்வையாளர்களை அழைத்து வரும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. இந்த வகையில் ஷகீலா திரைப்படங்கள் ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கே ஒரு மாற்று வணிக சக்தியாக உருவெடுத்தன......
ரதிநிர்வேதம் முதல் ஷகீலா வரை நடந்த இந்த பயணம் வெறும் B-Grade திரைப்படங்களின் வரலாறு மட்டும் அல்ல. இது மலையாள மக்களின் திரைப்பட ரசனை எப்படி மாறியது என்பதன் வரலாறும் கூட. ஒரு காலத்தில் திரையரங்குகளில் உருவாக்கப்பட்டிருந்த பாலியல் ஆர்வம், பின்னர் வீடியோ கேசட்டுகளுக்கும், VCD-க்களுக்கும், DVD-க்களுக்கும், இறுதியில் இணையத்திற்கும் சென்றது. அதோடு மலையாள பிகிரேடு சினிமாக்களின் அந்திமம் வந்தது......
இந்த படங்கள் கேரளத்தோடு நிற்கவில்லை மலையாளம் தாண்டி தமிழ்நாடு ஏன் இந்தியா முழுவதும் பரவியது. இந்தியாவுக்கு வெளியேயும் பரவியது ஷகீலா நடித்த கின்னாரதும்பிகள் படம் ஆறு இந்திய மொழிகளிலும் இந்தியாவுக்கு வெளியே மூன்று மொழிகளிலும் மொழியாக்கம் செய்யபட்டு வெளிவந்தது. இந்ந படத்தின் வேற்றிக்கு பிறகு 2001 மலையாள சினிமாவில் வெளிவந்த முப்பது சதவிகிதம் படங்கள் சகிலா நடித்தது அல்லது தலை காட்டியது.....
நிற்க இது மலையாள சாப்ட் பார்ன் படங்களின் வரலாறா ஆனால் ஏன் இப்போது இதை எழுதுகிறேன் என்றால் இங்கேதான் தமிழ் நாட்டில் மலையாள கேரக்டர்களை பாலியல் விரசத்தோடு காட்ட தொடங்கிய காலம் உருவானது. கவுண்டமனி செந்தில் காமெடிகள் மக்களுக்கு அலுக்க தொடங்கியபோது வடிவேலு விவேக் காலம் வந்தது வடிவேலு தன் உடல்மொழியால் மக்களை சிரிக்கவைத்துகொண்டிருந்தார் ஆனால் விவேக்கிடம் கண்டன்ட் இல்லை. அவருக்கு மிமிக்ரியிலும் அரைகுறை எழுத்து காமெடியிலும் அரைகுறை....
காலத்தை ஓட்ட வேண்டுமே அவர் பாகயராஜ் மற்றும் பாக்யிராஜ் பள்ளியில் இருந்து வந்த இயக்குனர்களின் படங்களில் இலைமறை காய்மறையாக இருந்த விரச காமெடிகளை கையில் எடுத்தார். அந்த விரச காமெடிகளில் அவரது காலத்தில் உச்சத்தில் இருந்த மலையாள சாப்ட் பார்ன் படங்களின் ரெபரன்ஸ்களை வைத்து மலையாள பெண்களின் உடல் அமைப்பை சுற்றி காமெடிகளை எழுதினார். அது இங்கே போனியாகவே அவரைத்தொடரந்து வந்த காமெடியன்களும் இயக்குனர்களும் ஏன் பாடலாசகரியர்களும் அதில் பிடித்து கொண்டனர். ஷகீலா அஞ்சு போன்றவர்கள் அங்கே பீல்ட் அவுட் ஆனதும் அவர்களையே நேரடியாக இந்த மாதிரி காட்சிகளில் பயன்படுத்த தொடங்கினர்.....
இரண்டாயிரத்தி ஐந்திற்கு பிறகான தமிழ் சினிமா போக்கை பாலா சசிகுமார் அமீர் வெற்றிமாறன் ராம் பா. ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்கள் மாற்றினர். இவர்களுக்கு பிறகு இந்த மாதிரியான தமிழ் சினிமா காட்சிகள் அரிதிலும் அரிதாகி விட்டன. கட்டாகுஸ்தி போன்ற தற்போதய சினிமாக்காள் நான் மேல் சொன்ன விவேக் பானியில் தற்காலத்தில் மிக அரிதாக வெளியானஃஉவ்வேக் ரகம்தான் என்றாலும் அது இன்றைய தமிழ் சினிமாவின் அடையாளமல்ல