'Women and Child' விதவைத்தாயின் வலியை உணர்வுபூர்வமாக சொன்ன திரைப்படம்!

women-and-child-movie-review
'Women and Child' விதவைத்தாயின் வலியை உணர்வுபூர்வமாக சொன்ன திரைப்படம்!

ஒரு ஈரானிய விதவைத்தாயின் ஏமாற்றத்தையும், கோபத்தையும்,வலியையும் உணர்வுபூர்வமாக சொன்ன திரைப்படம்தான் 'Women and Child'.

Mahnaz (Actress Parinaz izadyar)ஒரு விதவைத்தாய்.அவளுக்கு 14 வயதில் ஒரு மகனும்,8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.இவர்களுடன் Mahnaz-ன் தாயும், தங்கையும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

Mahnaz ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறாள்.அதே மருத்துவமனையில் Hamid (Actor Payman Maadi)ambulance ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள்.திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்கிறார்கள்.

திருமணத்தை முடிவு செய்வதற்காக Mahnaz-ன் வீட்டிற்கு வருகிறார்கள் Hamid-ன் குடும்பத்தார்.

வீட்டில் Mahnaz-ன் தங்கையைப் பார்த்தவுடன் மனம் மாறுகிறான் Hamid.

Hamid, Mahnaz-ன் தங்கையை திருமணம் செய்ய விரும்புவதாக Hamid-ன் குடும்பத்தார் சொன்னவுடன் Mahnaz-ன் தாய் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள்.

சிறிது நாட்களில் இவளும் மனம் மாறுகிறாள்.திருமணமும் நடந்தேறுகிறது.

இது ஒருபக்கம்.

Mahnaz-ன் மகன் சுட்டித்தனத்தில் No 1.இவன் செய்கிற சுட்டித்தனத்தால் பள்ளியிலிருந்து அடிக்கடி Suspend செய்யப்படுகிறான்.Mahnaz மகனுக்காக பள்ளியில் சென்று உரிமைக்குரல் எழுப்புகிறாள்.அவனுக்காக பரிந்து பேசுகிறாள்.அவன் என்னதான் சேட்டை செய்தாலும் பொறுத்துக்கொள்கிறாள்.அவனும் தாயின் மீது மிகுந்த பாசம் செலுத்துபவன்.

சிலநாட்கள் இவனுடைய தாத்தா வீட்டில், (Mahnaz-ன் மாமனார் வீடு) இருக்கும் பொழுது ஒரு விபத்தில் இறந்து போகிறான்.

சிறிது நாட்களில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதை தெரிந்து கொண்டு சம்மந்தப்பட்டவரை பழிவாங்க திட்டமிடுகிறாள்.

மகனின் சாவுக்கு யார் காரணம்?அவர்களை இவள் எப்படி பழிதீர்க்கிறாள் என்பதுதான் மிச்சம் மீதிக்கதை.

விதவைத்தாயாக நடித்த நடிகை Parinaz izadyar -யின் நடிப்புதான் இத்திரைப்படத்தில் அமைந்த மிக சிறப்பான அம்சம் என்று சொல்லலாம்.

2019-ஆம் ஆண்டு ரிலீஸான 'The warden'திரைப்படத்தில் நிருபராக நடித்திருப்பார்.அந்தப் படத்தில் இவருடைய அழகான தோற்றம் எனை மிகவும் வசீகரித்தது.

ஆறு வருடத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.கதாபாத்திரத்திற்காகவும் தன்னை மாற்றியிருக்கலாம்.

நாம் எத்தனையோ படங்களில் சேட்டை செய்யும் பிள்ளைகளின் காட்சிகளைப் பார்த்திருப்போம்.

ஆனால்,இந்தப் படத்தில் அமைந்தது போல் நான் எந்தப் படத்திலும் பார்த்ததில்லை.

இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் இயக்குநரான Saeed Roustaee-ன் முந்தைய திரைப்படமான Leila's Brothers (2022)வும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது

நன்றி சே மணிசேகரன்.

மீள் பதிவு