பிகினியில் மோகனுடன் நடிகை ஜெயஸ்ரீ!!

actress-jaya-sri
பிகினியில் மோகனுடன் நடிகை ஜெயஸ்ரீ!!

நடிகை ஜெயஸ்ரீ திரையில் அறிமுகமாகி 37 வருடங்ளுக்கு மேல் ஆகிறது. 1985 ஆம் ஆண்டு, மே 31 இதே நாளில் ஜெயஸ்ரீ அறிமுகமான தென்றலே என்னைத் தொடு திரைப்படம் வெளியானது.

மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிறாடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

தென்றலே என்னைத் தொடு காதல் திரைப்படம். தான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியின் மகளை, அவர் முதலாளியின் மகள் என்பது தெரியாமல் மோகன் காதலிக்கிறார். வேறொரு பெண்ணுடன் மோகனுக்கு நட்பு இருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு அவரை பிரிகிறார் நாயகி.

சிறிது காலத்துக்குப் பின் இருவரும் பிறிதொரு இடத்தில் சந்திக்க நேர்கிறது. நாயகியின் மனம் இப்போது நாயகனை நோக்கி சாயத் தொடங்கியிருக்கிறது. ஆனால், நாயகனோ அவளிடம் கண்டிப்புடன் இருக்கிறான். இறுதியில் இருவரும் ஒன்றிணைவதுடன் சுபம்.

ஸ்ரீதரின் பிற படங்களின் கதை, காட்சிகளுடன் ஒப்பிடுகையில் தென்றலே என்னைத் தொடு படத்தை மேலோட்டமாக இடது கையால் அவர் டீல் செய்திருப்பது தெரியும்.

விலகிச் செல்லும் நாயகன், அவனை மொய்க்கும் இளம் பெண்கள், அதைப் பார்த்து பொறாமைக் கொள்ளும் நாயகி என எல்லாமே பார்த்துப் பழகிய காட்சிகள். ஆனால், இளமைத் துள்ளலுடன் காட்சிகளை அமைந்த விதத்தில் அன்றைய இளைஞர்களை எளிதாக கவர முடிந்தது.

ஜெயஸ்ரீக்கு இதுதான் முதல் படம். சினிமா அவரது குடும்பத்துக்கு புதிதல்ல. பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.ஜெயலட்சுமியின் பேத்தி இவர். இவரது தாத்தாக்கள் - அதாவது ஜெயலட்சுமியின் சகோதரர்கள் எஸ்.ராஜம், எஸ்.பாலச்சந்தர் இருவருமே இசையமைப்பாளர்கள். பின்னவர் தயாரிப்பு, இயக்கம் என பரந்து செயல்பட்டு பத்ம பூஷண் விருதுவரை வாங்கியிருக்கிறார்.

தென்றலே என்னைத் தொடு படத்தின் ஹீரோ என்றால் அது இளையராஜாவின் இசையும், பாடல்களும். பாடல்களுக்காகவே ரசிகர்கள் மறுபடி மறுபடி திரைப்படத்தைப் பார்த்தனர். அதிலும் குறிப்பாக புதிய பூவிது பூத்தது பாடலில் ஜெஸ்ரீயின் நீச்சல் உடை தோற்றத்துக்காகவே இளைஞர்கள் திரையரங்கை மொய்த்தனர்.

மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெற்ற அசோக்குமார் தென்றலே என்னைத் தொடு படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். அனைத்துக் கோணங்களிலும் அவரது கேமரா ஜெயஸ்ரீயின் அழகை அள்ளிக் காட்டியது.

இளையராஜா இசையில் தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். மற்ற பாடல்கள் அனைத்தும் வாலி. கண்மணி நீ வர காத்திருந்தேன்..., கவிதை பாடு குயிலே... உள்பட மொத்தம் ஆறு பாடல்களில் நான்குப் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

ஜெயஸ்ரீ 1988 இல் திருமணம் செய்யும்வரை பிஸியாக நடித்தார். பிறகு 1997 இல் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கார்த்திக் நடித்த பிஸ்தா, 2014 இல் காதல் 2 கல்யாணம், 2016 இல் மணல் கயிறு 2 போன்று ஒருசில படங்களில் தலைகாட்டினார். தற்போது கணவர், இரு குழந்தைகளுடன் யுஎஸ்ஸில் வசிக்கிறார்.

ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களில் சுமாராக நடிப்பவர் என்ற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனால், அவரது அழகு அந்தக் குறையை ஓரளவு மறக்கடித்தது எனலாம். இன்று தென்றலே என்னைத் தொடு படத்தைப் பார்த்தாலும் இதனை உணரலாம்.