அஸ்மா பானு என்கிற ரேஷ்மாவின் பட வசூல்!
Asma Bhanu என்கிற Reshma - பெரிய நடிகைகளையே வாய்பிளக்க வைத்த ரேஷ்மா சம்பளம் மம்மூட்டி மோகன்லாலையே பயமுறுத்திய ரேஷ்மாவின் பட வசூல்
இவர் உண்மையில் B கிரேட் படத்திற்கு விரும்பி வரவில்லை இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி சில AGENT கள் அந்த மாதிரி படங்களில் நடிக்க வைத்தனர்...ஒரு கட்டத்திற்குமேல் இவர் அதிலிருந்து மீள முடியாமல் அதையே தொழில் ஆக்கிக்கொண்டார்
இவர் PEAK இல் இருந்த 95 to 2000 காலகட்டத்துல இவருடைய சம்பளம் ஒரு படத்துக்கு 5 லட்சம் வெறும் மூன்று நாள் callsheet... அந்த படத்தோட மொத்த budget 15 லட்சம் தான் அந்தக் காலகட்டத்தில், ஒரு பெரிய பட்ஜெட் மம்மூட்டி அல்லது மோகன்லால் படம் ஈட்டும் வசூலை விட, மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரேஷ்மாவின் படங்கள் அதிக லாபத்தைத் தந்தன.
அந்த காலத்தில் சிம்ரன், ஜோதிகா, மீனா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் ஒரு படத்திற்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினர். மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும்போது மட்டுமே இந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒரு படத்தை முடிக்க 30 முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி பார்த்தல் ரேஷ்மாவின் 50 நாள் சம்பளம் 80 லட்சம்.
மலையாள சினிமாவில் பல நேரங்களில், சூப்பர் ஸ்டார்களின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருக்க, பக்கத்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ரேஷ்மா படத்திற்கு Housefull காட்சிகள் ஓடின.
ரேஷ்மா மற்றும் ஷகீலா படங்கள் ஒரே நேரத்தில் பல தியேட்டர்களில் வெளியானால், அது மெயின்ஸ்ட்ரீம் படங்களின் வசூலை பாதிக்கும் என்று விநியோகிஸ்தர்கள் அஞ்சினர். இதனால், பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடும்போது, இந்த படங்கள் வெளியாகாமல் இருக்க சில "அறிவிக்கப்படாத" கட்டுப்பாடுகளை விநியோகிஸ்தர் சங்கம் மறைமுகமாக விதித்ததுண்டு. சில சமயம், பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் இந்த படங்களின் வரவைப் பொறுத்து மாற்றியமைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இதுல வேணும்னே டைட்டில் வச்சு வெருப்பெற்றியும் இருக்கிறார்கள் ரேஷ்மா நடித்த படங்களுக்கு, வரப்போகும் சூப்பர் ஸ்டார் படங்களின் பெயர்களைப் போலவே கிண்டலாகப் பெயரிட்டு வெளியிடுவார்கள்....உதாரணத்திற்கு, மம்மூட்டியின் 'ராட்சசராஜாவ்' (Rakshasa Rajavu) வெளியான சமயம், 'ராட்சசராஜ்னி' (Rakshasa Rajni) என்ற பெயரில் இவர்கள் படம் வெளியாகி வசூலை அள்ளியது. இது போன்ற தந்திரங்கள் பெரிய நடிகர்களை மிகுந்த எரிச்சலுக்குள்ளாக்கின.
அக்காலகட்டத்தில் மலையாள சினிமா கடும் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அப்போது தியேட்டர்களை மூடாமல் காப்பாற்றியது ரேஷ்மா மற்றும் ஷகீலாவின் படங்கள் தான். "நூண் ஷோ" (Noon Show) எனப்படும் நண்பகல் காட்சிகளில் இந்தப் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தியேட்டர் அதிபர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்தன.
இந்த அதீத வளர்ச்சியே ஒருகட்டத்தில் மெயின்ஸ்ட்ரீம் சினிமா துறையினரை ஒன்றுசேர வைத்தது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தாலும், சென்சார் விதிகளாலும் தான் பிறகு இந்தப் படங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது
2005 இற்கு மேல் internet வசதிகள் அதிகமானதால் இவர்களின் படங்களை பார்க்கும் தேவை ஆண்களுக்கு இல்லை அதுவே reshma downfall ஆரம்பித்த நேரம்
வாய்ப்பை இழந்த reshma பணத்திற்காக bangalore இல் பலான தொழிலில் இருக்கும்போது போலிஸ் இவரை கைது செய்தது.. RESHMA ARRESTED! அப்படீன்னு youtube ல போட்டு பாருங்க ஒரு leaked video வரும் அது இவங்கள arrest பண்ணும்போது ஒரு போலீஸ் இந்த பொண்ணோட போன் வாங்கி video எடுத்து அசிங்கமாவும் கீழ்தனமாவும் கேள்வி கேப்பாரு அந்த video வ லீக் வேற பன்னிருக்கானுங்க... சுத்தமா அந்த போலீஸ் காவல் விதிமுறைகளை மீறிதான் அந்த video எடுத்துருக்காரு... அவர் மேல எந்த actionனும் எடுக்கபடல
இன்னைக்கு shakeela சமுதாயத்துல பல பெரிய hero படங்கள்ல நடிச்சு இன்னைக்கு youtube interview எடுத்து ஒரு மரியாதையோட சமுதாயத்துல இருந்தாலும் ரேஷ்மாவுக்கு நடந்த அந்த அவுமானத்துல அவங்க தன்னோட இருக்குற இடம் அடையாளத்த எல்லாம் மறச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.