கொலைச் சேவல் (2026) மூவி விமர்சனம்

kolai-seval-2026-movie-review
கொலைச் சேவல் (2026) மூவி விமர்சனம்

காதல் திருமணம் செய்து கொண்ட காளி (கலையரசன்)அனுசுயா(தீபா பாலு) கிராமத்தில் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணையாக அனுசுயா இருப்பதால் குடும்ப வழக்கப்படி குலதெய்வம் கோயிலுக்கு சேவலை அறுத்து பூஜை செய்ய அனைவரும் செல்கிறார்கள்.

காதல் திருமணத்தை எதிர்க்கும் மன நிலையில் உள்ள அனுசுயாவின் அப்பா தம்பி மற்றும் உறவினர்கள் கொடூர ஆயுதங்களுடன் காட்டில் இருக்கும் அந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

அங்கே குலதெய்வம் கோயில் முன்பு என்ன நடக்கிறது என்பது கொலை சேவல் படத்தின் கதை.
கிராமியப் பின்னணியில் குலதெய்வம் கோயிலுக்கு ஒரு சேவலை பலி கொடுக்க டிராக்டரில் புறப்படுதில் இருந்து கதை தொடங்கிறது உறவினர்களின் கேலி கிண்டல் பழங்கதை என காட்சிகள் விரிகிறது.

காளி நிறைமாத கர்ப்பிணி மனைவியை பைக்கில் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டே தனது காதல் கதையை விவரிக்கிறார் அது ஃபிளாஷ்பேக் காட்சிகளாக நம் கண்முன்னே விரிகிறது.

கோயில் பூஜை முடிந்து அனைவரும் வீட்டுக்கு டிராக்டரில் சென்று விட நாயகனும் நாயகியும் புல்லட்டில் செல்ல எத்தனிக்க அங்கே கலவரம் வெடிக்கிறது சாதி பாகுபாடினால் இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். கலையரசன் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை.

எல்லா படங்கள் போலவே எதார்த்த காமெடியில் கலக்குகிறார் பால சரவணன் ஆனால் சிரிக்கத் தான் முடியவில்லை.

சாதிய பிரச்சினையில் ஆணவக் கொலைக்காக நாயகன் நாயகி கொலை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் அதற்காக நிறைமாத கர்ப்பிணியான நாயகியின் வயிற்றிலிருந்து குழந்தை வெளியே எடுத்துக் கொல்வதெல்லாம் டூ மச்..!

இவ்வளவு கொடூரமாக கொலையை காட்சிப்படுத்திருக்க வேண்டுமா?

20 நிமிடங்களுக்கு மேல் விரியும் இந்த காட்சியினால் பரிதாபத்தை விட வெறுப்பு தான் ஏற்படுகிறது.

காட்டையும் அழகாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவு இயக்குநர் P.G.முத்தையா பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில் கொலைச் சேவல் படம் பார்ப்பவர்களை கொலை செய்து விடுகிறது.