இந்த படத்த போய் பிளாப் ஆக்கிட்டாங்களே!
Majaa - இந்த படம் விக்ரமோட கரியர்ல தில் படத்துக்கு அப்புறம் தூள் படத்துக்கு முன்னாடி வந்து இருக்கலாம் Hit டும் ஆயிருக்கும்.
என்ன பண்றது இந்த படத்தோட ஒரிஜினல் மலையாளம் வெர்ஷன் மம்மூட்டி, லால் சேர்ந்து நடிச்ச Thommanum makkalum படம் 2005 ல தான ரிலீஸ் ஆச்சு.. அந்தப் படம் மலையாளத்துல செம ஹிட்.
.
அதே டைரக்டர் வச்சு தமிழ்ல ரீமேக் பண்ணாங்க majaa அப்படின்னு தமிழ்ல இது ஒரு ஆவரேஜ் படமா மாறிடுச்சு.

காரணம் இந்த படம் விக்ரம் ஓட அந்நியன் படத்துக்கு அப்புறம் வந்துச்சு.. அந்த டைம்ல விக்ரமோட highest collection படம் அன்னியன்.
அந்தப் படத்துக்கு அப்புறம் விக்ரம வேற மாதிரி மக்கள் எதிர்பார்த்தாங்க அப்போ ஒரு usual entertainment படமான மஜா வந்தது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அசினுக்கும் கஜினுக்கு அப்புறம் வந்த படம்.. அதனாலேயே என்னவோ எதிர்பாப்பு அதிகமா இருந்தது.
இன்னொரு பிரச்சனை சிவகாசி படத்தோட ரிலீஸ் பண்ணாங்க அந்த தீபாவளிக்கு சிவகாசி தான் பெரிய ஹிட்.
இன்னைக்கும் வித்தியாசாகரோட மியூசிக் ல எனக்கு ரொம்ப புடிச்ச படம் மஜா தான்... எல்லா பாட்டுமே சூப்பரா இருக்கும் மியூசிக் செமயா பண்ணி இருப்பாரு.
மஜா - பசுபதி விக்ரம் இரண்டு பேரும் அனாதை பசங்க.. மணிவண்ணன் அவரோட மனைவி குழந்தைகள் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க... அனாதை ஆசிரமத்தில் தப்பிச்சு வந்த விக்ரமும் பசுபதியும் மணிவண்ணன் கிட்ட வளர்றாங்க.. இவங்க மூணு பேரும் அந்த ஊர்ல திருட்டு பசங்க.. ஒருநாள் திருட்டை விற்றுலாம் ஒழச்சு பொழைக்கலாம்னு முடிவு எடுத்து
அவங்க வீடு வாசல் எல்லாம் வித்து ஒரு லாரி வாங்கி... பொழைப்பு தேடி அந்த ஊரைவிட்டே போறாங்க... போற இடத்துல லாரி ரிப்பேர் ஆகி ஒரு இடத்துல தங்குறாங்க.. அந்த மணிவண்ணனுக்கு பசிக்குதுன்னு pasupathi ஒரு வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வருவாரு.. அந்த சாப்பாடு சாப்பிட்டு மணிவண்ணனுக்கு ரத்த வாந்தி வந்துரும்.. ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனா நீங்க விஷம் கலந்த சாப்பாட சாப்பிட்டு இருக்கீங்கன்னு சொல்றாங்க.
கடைசில தான் தெரியுது pasupathi ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு திருடிட்டு வந்து இருக்காரு அப்படின்னு.
அது ஒரு விவசாயி வீடு கடன் தாங்காம.. அந்த வீட்ல உள்ள விவசாயியா நடிச்ச விஜயகுமார்.. தற்கொலை பண்ணிக்கொள்ளலாம் என்று சாப்பாட்டில் விஷம் வச்சிருப்பாரு.. அத பசுபதி திருடிட்டு வந்து அவங்க அப்பாக்கு குடுத்து அப்பாவ கொ*** பார்த்திருப்பார்.
அப்புறம் பிரச்சனை என்னன்னு விசாரிச்சா... அந்த ஊர்ல ராயர் யாரு.. அசின் யாரு அவங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை... அத விக்ரம் குடும்பம் எப்படி solve பண்றாங்க.. அதுதான் மீதி கதை.
இந்த படத்துல நிறைய டார்க் காமெடி இருக்கும்... அப்ப மக்களுக்கு dark comedy னா என்னன்னே தெரியாது... படம் எங்கேயும் போரடிக்காது செம Fun னா போகும்.
உண்மையில் மலையாளத்தை விட தமிழில் வடிவேலு காமெடியில் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.
மலையாளத்தில் அந்த புலி பாண்டி காமெடி கேரக்டர் ஒரு தமிழன் போல் கேரக்டர் வடிவமைத்து இருப்பார்கள் அவன் ஒரு காமெடி பீஸ் என்று கலாய்த்திருப்பார்கள் .
இதோட மலையாள vesion எடுத்து பார்த்துட்டு.. இது ஏதோ பழைய படம்னு நினைச்சேன் பார்த்தா 2005 ல தான் அந்த படமும் வந்திருக்கு.. அந்தப் படத்துக்கும் இந்த படத்துக்கும் குவாலிட்டி difference நிறைய இருக்கும்.. அதுதான்...cinematographer பாலசுப்ரமணியம் ஓட மேஜிக்.. இதோட தமிழ் வர்ஷன் மேக்கிங் ரொம்ப நல்லா இருக்கும்.
ஒரு பெரிய உண்மை என்னன்னா 2000 டைம்ல நிறைய குவாலிட்டியான தமிழ் படங்கள் வந்துச்சு அதை ஏத்துக்கிற மெச்சூரிட்டி இல்ல மக்களுக்கு... ஆனா இப்போ மக்கள் அந்த மாதிரி படங்கள் எதிர்பார்க்கும் போது... இப்போ அந்த மாதிரி குவாலிட்டியான படங்கள் வருவதில்லை.