நடிகை அபிதா சினிமாவில் நடித்த ரகசியம்!
Actress Abitha - குடும்பத்தின் வருமையால் பலான படத்தில் நடித்தார் ... சேதுவுக்கு பின் ஏன் சினிமாத்துறை இவரை வெறுத்து ஒதுக்கியது தெரியுமா..
சீரியல் நடிகை என்றால் நம்மளுக்கு முதலில் ஞாபகம் வருவது அபிதாவை தான்.
அந்த அளவுக்கு இவரின் திருமதி செல்வம்... தமிழ்நாட்டின் தாய்மார்களை பாதித்தது
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் சேர்த்து மொத்தம் 21 சீரியல்களில் நடித்துள்ளார்.. ஆனால் இவரின் பெயரை சொன்னால் திருமதி செல்வம் தான் ஞாபகம் வரும்
இவரின் உண்மையான பெயர் Jenila... இவருக்கு அபிதா என்ற பெயர் வைத்தது இயக்குனர் பாலா தான்.

இவர் சிறுவயதில் அவரின் வீட்டுக்கு அருகில் நடந்த நாடகத்தின் சூட்டிங்.. பார்க்க சென்றபோது இவரை பார்த்த அந்த இயக்குனர் ஒரு நாடகத்தில் ஒரு வேடம் கொடுத்தார்.. அப்பொழுது இருந்து இவர் நிறைய நாடகங்களை நடித்து இருக்கிறார்
அப்பொழுதுதான் சேது பட வாய்ப்பு கிடைத்து நடித்தார் அந்தப் படம் ரிலீஸ் ஆகுவதற்கு இரண்டு வருடம் எடுத்தது... அப்பொழுது இயக்குனர் பாலா இவருக்கு ஒரு ஒப்பந்தம் போட்டார் சேது படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று
ஆனால் இவர் வீட்டில் தந்தை கிடையாது இவரின் அக்கா தங்கச்சி மூன்று பேர் இவர் சம்பாதித்தால் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலைமை வேறு வழி இல்லாமல் அந்த ஒப்பந்தத்தை உடைத்து சில படங்களில் நடித்தார்
அது கூட பரவாயில்லை ஆனால் இவர் தேவதாசி என்ற ஒரு மலையாள B கி**ரேடு படத்தில் நடித்தது தான்..... இவருக்கு பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்தது... அந்த வயதில் இவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்தப் படத்தில் நடித்து விட்டார்
சகிலா பாபிலோனா கூட இந்த அளவுக்கு ஒரு படு பயங்கரமான காட்சிகள் நடித்திருப்பாரா என்று தெரியவில்லை.
தேவதாசி படத்தில்... இவரின் தந்தை ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வதால் இவர் தேவதாசி ஆக்கப்படுவார்... முதலில் அந்த ஊர் பெரியவரான ஒரு கிழவரின் இச்சைக்கு தான் இறையாக்கப்படுவார்... அதன் பிறகு அந்த ஊரில் இருக்கும் ஒரு வாலிபனை இவர் காதலிப்பார்... அவனுடன் நடக்கும் காட்சிகள் தான் படு பயங்கரம்.
கொடுமை என்னவென்றால் சேது படம் ரிலீசான அதே வருடம் மூன்று மாதத்திற்கு முன்னரே இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது அந்தப் படத்தை பாலா பார்த்து இருப்பார் போல. பாலா இவர் மேல் பயங்கர கோபத்தில் இருந்திருக்கிறார்
சேது படத்தை Movie crew பார்ப்பதற்கு ஒரே ஒரு காட்சிக்கு மட்டுமே இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்... அதன் பிறகு இளையராஜா பார்த்த ஒரு preview showம் சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்த ஒரு preview show ம் இவரை அழைக்கவே இல்லையாம்.....ஏன் எந்த வெற்றி விழாவுக்கும் இவரை அழைக்கவில்லை... அதை பல இன்டர்வியூவில் அபிதாவே ஆதங்கப்பட்டு சொல்லி இருக்கிறார்
ஒருவேளை தேவதாசி போன்ற ஒரு படத்தில் நடித்தது கூட பாலா மற்றும் விக்ரமின் கோபமாக இருக்கலாம்.
ஆனால் சேது படம் வெற்றிக்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது... அப்பொழுதும் இவர் சொதப்பி இருக்கிறார் வந்த வாய்ப்புகளை உதறி விட்டு படிக்கப் போகிறேன் என்று college சென்று விட்டார்
இரண்டு வருடம் கழித்து ராமராஜனின்.. கடைசி கொடூர படம் என்று தெரியாமல் சீறி வரும் காளை என்ற படத்தில் நடித்ததும் பெரிய தவறு.
கொடுமை என்னவென்றால் இவருக்கும் ராமராஜனுக்கும் தொடர்பு இருப்பதால்தான் ராமராஜனின் மனைவி விவாகரத்து செய்ததற்கு காரணம் என்று பத்திரிக்கையில் கிசுகிசு எழுத ஆரம்பித்தனர்
அதன் பிறகு இவருக்கு கிடைத்த கொஞ்ச வாய்ப்புகளிலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விதான்
இவர் நேரக் கொடுமையா என்னவென்று தெரியவில்லை சேது போன்ற சரித்திர வெற்றிக்குப் பிறகும் அடி மேல் அடி... அதன் பிறகு ஒரு ஆப்பை இவரே தேடி வைத்துக் கொண்டார்
2005 இல் " உள்ள கடத்தல் " என்ற படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே கலைஞரின் கண்ணம்மா படத்தில் கண்ணமாவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவும் வாயை பிளந்து கொண்டு அந்த படத்தை பாதியில் விட்டுவிட்டு இந்த படத்திற்கு ஒப்புதல் சொல்லியிருக்கிறார்... உள்ள கடத்தல் படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில்... கண்ணம்மா மற்றும் உள்ள கடத்தல் இந்த இரண்டு படத்திலும் இவர் நடிக்கக் கூடாது என்று ப்ரொடியூசர் கவுன்சில் இவருக்கு தடை விதித்தது...பிறகு கண்ணம்மா படத்தில் மீனா நடித்தார் .
அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று கல்யாணம் நிச்சயம் செய்த போது தான் இவருக்கு திருமதி செல்வம் வாய்ப்பு கிடைத்து இவர் வாழ்க்கையை திருப்பி போட்டது.