தி.மு.க எம்.பி-யும் மகளிரணி தலைவருமான கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்து வருவதுடன், நிவாரண உதவிகளையும் செய்துவருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், முழுக்கவச உடை அணிந்துகொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்துத்து விசாரித்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.