சென்னை:
டெல்லி பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பு சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்புடன் ஆளுயர மாலையை அணிவித்தனர்.
பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,
காங்கிரஸ் கட்சி சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி எனவும், அக்கட்சியில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரியாதை இல்லை எனவும், காங்கிரஸ் கட்சியினர் என்னை நடிகையாக மட்டும்தான் பார்த்தனர் என்றார்.