Breaking News :

Friday, April 26
.

சபரிமலையில் கோவில் தரிசனத்துக்கு வந்த இயக்குநர் விக்னேஷ் 


சபரிமலையில் கோவில் தரிசனத்துக்கு வந்த இயக்குநர் விக்னேஷ் 

இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

வருடத்திற்கு 2,3 முறை சபரிமலைக்கு வர முயற்சி எடுப்பேன். 2019 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு வந்தேன். அதன்பின்னர் கொரோனா ஆரம்பித்ததால் வரவில்லை. சிறு வயதிலேயே எனது அப்பாவுடன் சபரி மலைக்கு வருவேன். இப்போது அப்பா இல்லை. அவருக்காகவும் சேர்த்து தனியாக வருகிறேன்.

ஒரு கோயிலுடன் மற்ற கோயிலை ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு கோயிலும், தனித்துவம் மிக்கது. திருப்பதி போனால் ஒருவிதமாக உணர முடியும். சபரி மலைக்கு வரும்போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். சபரிமலைக்கு பக்தர்கள் வரும் விதம், அவர்களை சாந்தப்படுத்தி விடும். பக்தி என்பது எல்லாருக்கும் இருக்கிறது. நான் சபரிமலை ஐயப்பனை விரும்பி வணங்குவேன்.

செருப்பு அணியாமல் விரதமிருந்து நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்வது உடலில் புத்துணர்ச்சியை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஜோதி தரிசனத்திற்காக வந்துள்ளேன். 2019-ல் பார்த்தோம். அதன்பின்னர், கொரோனாவால் 2 ஆண்டுகள் பார்க்க முடியவில்லை. திரும்பவும் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.