திருக்குறள் 1110:

By Tejas

திருக்குறள் 1110:

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

எம் எஸ் கே சாமி விளக்கம்:-
ஆறறிவு படைத்த மனிதன் சான்றோர்களும் ஞானிகளும் எழுதிய அரிய நூல்களை கற்க கற்க படிக்கப்படிக்க பலவகையான புதுமையான விஷயங்களைத் தெரிந்து கொண்டு புது புது கருத்துக்களை படித்து எழுதி அவனும் ஒரு சிறந்த மனிதனாகிறான். அதுபோல புணர்ச்சிமிகுதி அதிகாரத்தில் காதலன் காதலியை ஒரு புத்தகமாக நினைத்து மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்ளும் பொழுது புதிய அனுபவங்களையும் விஷயங்களையும் தெரிந்து கொள்கிறான்.

1.அறிதோறு :- உலகத்தில் எத்தனையோ வகையான நூல்கள் அறிவுக் களஞ்சியங்கள் பொக்கிஷங்கள் சங்க காலத்திலிருந்து பல இலக்கியங்கள் உள்ளன அதை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் அதிலுள்ள நுண்ணிய கருத்துக்களை வைத்து அவன் ஒரு சிறந்த மனிதனாவான்.

2 அறியாமை :- அதனால் அவனுக்கு அறியாமை என்னும் பேதமை விலகி புதிய உலகிற்கு புது ஞானத்துடன் புதுப்பொலிவுடன் வாழ முடியும். அதுபோல பெண்களின் மிகச்சிறந்த குணங்களை மதித்து அவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் எந்த ஒரு தலைவனும் கொடுத்தால் அவனுடைய வாழ்க்கை என்றும் சிறப்பாக அமையும். காரணம் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அதனால் பெண்களை எந்த வழியில் ஒரு ஆண்மகன் நடத்துகிறார் அதை வைத்து அவளுடைய வாழ்க்கை சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
 வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் தான் துணை நிற்கிறாள் என்பது வரலாறு

3.கண்டற்றால் காமம்:- அதுபோல காமம் எண்ணப்படும் இன்பத்துப் பாலில் காதலன் ஒவ்வொரு முறையும் காதலியை பார்க்கும் பொழுது புது புது புதுமையான ஆசைகளும் பால் உணர்வுகளும் தோன்றக் கூடிய வகையில் அவளுடைய தோற்றமும் அழகும் அணிகலன்களும் நடையுடை பாவனைகளும் இருக்க வேண்டும். தினமும் ஒரு புது பெண்ணை பார்ப்பது போல  காதலி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் காதலனால் அவளுக்கு தேவையான அனைத்து ஆசைகளையும் அன்பான அரவணைப்புடன் பூர்த்தி செய்து  ஆயக்கலை 64 கலையும் செய்து மகிழ்வார்கள்.

4.செறிதோறும் :- செந்நிற அணிகலன்களை அணிந்த இவளின் அழகு காம உணர்வுகளைத் தூண்டும் படி உடலமைப்பு உள்ள அவளுடன் உறவு கொள்ளும்பொழுது  காதல் உணர்தலுக்கு எல்லை இல்லை எனலாம்.

5.சேயிழை மாட்டு :- சேய் என்றால் சிவந்த, இளமையான, செவ்வாய் இதழ்களைக் கொண்ட அழகிய மங்கை எனப்பொருள்படும். மாட்டு என்றால்  இணைத்தல், செருகுதல் எனப் பொருள்படும. இதற்கு அதிக விளக்கம் தேவையில்லை.

*வரலாற்றை நோக்குவோம்*
அதாவது ஆதிகாலத்தில் மனிதர்களுடைய நிறம் கருப்பாகத்தான் இருந்தது.  கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஆரியர்களின் வருகை மூலம் (வெள்ளை இன மக்கள் சிவப்பு நிறமுடைய   ஆண்கள்) தற்போதைய சிந்துசமவெளியில் உள்ள கைபர் பாஸ், போலன் பாஸ் கனவாய்  வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். 

 கன்னியாகுமரியில் இருந்து சிந்து சமவெளி வரை தமிழர்களின் எல்லை மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கையும் வடக்குவரை இருந்திருக்கிறது என்பதற்கு பல வகையான சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனவே திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஆரியர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் இனநிற வேறுபாடு உண்டாகிறது.

எனவேதான் திருவள்ளுவரும் ஒரு அழகிய மங்கையை பற்றி குறிப்பிடும்பொழுது சிவந்த மேனியை உடைய செவ்வாய் இதழ்களைக் கொண்ட பெண்ணைப் பற்றி குறிப்பிடுகிறார்.
என்பது எனது ஆராய்ச்சியில் தோன்றிய விசயமாகும்.  இத்துடன் புணர்ச்சி மிகுதல் அதிகாரம் முடிவுற்றது.

உட்கருத்து:- *காதலுக்கும், உணர்வுகளுக்கும் வயதில்லை*

.
மேலும்