நம் வெற்றியின் ரகசியம்: ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

By News Room

'இடையூறுகளை கண்டு அஞ்சக் கூடாது. அதைக் கண்டு கலங்கிப்போவதை காட்டிலும், எப்படி சமாளிக்கலாம் என்று யோசனை செய்து, வழியை காண்பதுதான் நம் வெற்றியின் ரகசியம். அது, பின்னால் எத்தனையோ பேர்களுக்கு வழி காட்டியாக கூட அமைந்து விடும்.


இவ்வாறு கூறியது பிரபல திரைப்பட தயாரிப்பாளர், ஏவி.மெய்யப்ப செட்டியார் தான் இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். விதையாக இருந்து ஏ.வி.எம்., எனும் விருட்சமாய் வளர்ந்தது இவரால் தான்.


இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தான் தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து ஏராளமான படங்களை இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.


தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படுபவர் இவர். (மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்). தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்றதோடு மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை தனது "பராசக்தி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய திரைமேதை ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.


காரைக்குடி நகரத்திற்கு வெளியே, தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்திருந்த ஒரு நாடக கொட்டகையையும், அதனை சுற்றியுள்ள காலி இடத்தையும் மாத வாடகைக்கு பிடித்து தனது படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் என்ற அந்த ஆலமரத்தின் விருட்சத்தை அங்கே தான் முதன் முதலில் விதைத்தார். 


அங்கே உருவான முதல் திரைப்படம் 1947ல் வெளிவந்த "நாம் இருவர்". இதனைத் தொடர்ந்து 1948ல் வேதாள உலகம் என்ற திரைப்படத்தையும் இங்கேயே தயாரித்து வெளியிட்டார். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு சினிமா வட்டாரத்தில் பெரும் மதிப்பையும், நற்பெயரையும் ஈட்டித் தந்தது.


ஏவி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஜெய்சிங் லால் கே.மேதா என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பெற்று மெய்யப்பன், படத்தில் பயன்படுத்தினார். `ஆடுவோமே... பள்ளு பாடுவோமே', `வெற்றி எட்டுத்திக்கும் என கொட்டுமுரசே' போன்ற பாரதியாரின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கின.


முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக மாற்ற விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்' என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து... 1 ரூபாய்கூட வேண்டாம்' என்று மொத்தமாக அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.

.
மேலும்