மன்னிக்கப் பழகுவோம்...

By News Room

ஊருக்காக நீங்கள்  உழைத்தாலும் *உங்களை நினைத்துப் பார்க்காத* உலகம் இது மன்னித்து விடுங்கள்.

அவர்களுக்கு தெரியாது *நீங்கள் இவ்வுலகிற்காக உழைக்கப் பிறந்தவன்* என்று.

உங்களால்  உதவிகள் பெற்றவர்கள் எல்லாம் உங்களை  எண்ணிப்
பார்க்கவில்லை என்றாலும்
மன்னித்து விடுங்கள்.

அவர்களுக்கு தெரியாது *நீங்கள்  பயன்கருதாது உதவிகள் செய்பவன்* என்று.

உங்கள்  உழைப்பை கொண்டு வாழ்வோர், வாழ்ந்தவர் எல்லாம் உங்களை  உதாசீனப்படுத்தினாலும்
மன்னித்து விடுங்கள்

அவர்களுக்கு தெரியாது *நீங்கள்   சகிப்புத்தன்மை நிறைந்தவர்* என்று.

உங்கள்  நிழலில் இளைப்பாறுபவர்கள் கூட உங்களை வெட்டி காயப்படுத்தினாலும்
மன்னித்து விடுங்கள்.

அவர்களுக்கு தெரியாது  *எத்தனை முறை உங்களை வெட்டினாலும் மீண்டும் தழைத்து வந்து  நிழல் தரும் உங்கள்  அருமை*

உங்களைப் பார்த்து சிரிப்பவர்கள் எல்லோரையும் 
மன்னித்து விடுங்கள்.

*நீங்கள்  சிரிக்கப் பிறந்தவன் , மற்றவர்களையும் சிரிக்க வைக்கப் பிறந்தவன்* என்பது அவர்களுக்கு தெரியாது.

உங்களைப் பார்த்துப் பழகியவர்கள் கூட பக்கத்தில் வந்து *பரிகாசம் செய்தாலும்*
மன்னித்து விடு.

அவர்களுக்கு தெரியாது *நீ பக்குவப்பட்டவன்* என்று.

அதிகாரம், ஆணவம், அகந்தை கொண்டு உங்களிடம் ஆட்டம் போட்டாலும்
மன்னித்து விடுங்கள்.

*அனைத்தையும் இறைவன்  பார்த்துக் கொண்டு இருக்கிறார்*  என்பது அவர்களுக்கு தெரியாது.

உங்களுடைய பொருளை தனது என, தனக்கு என எடுத்துச் சென்றாலும்
மன்னித்து விடுங்கள்.

*நீங்கள்  தானம் செய்யப்பிறந்தவன்* என்பது அவர்களுக்கு தெரியாது.

தெரிந்தவர்கள் கூட *நீ* (ங்கள்) யார் என்று கேட்டாலும்
மன்னித்து விடுங்கள்.

*நீங்கள்  இறைவனின் குழந்தை* என்பது அவர்களுக்கு தெரியாது.

பொருள் மீது பற்று கொண்டு *போகும் வழி மறந்து* விடுவோரையும்
மன்னித்து விடுங்கள்.

இங்கு *எதுவும் நிலையில்லை* என்பது அவர்களுக்கு தெரியாது.

*என்னையும் மன்னித்து விடு(ங்கள்)*

இதுவரை நான் எழுதியது,

இப்போது நான் எழுதுவது,

இனி நான் எழுதப்போவது
எதுவும்

சரியா? தவறா?

என எனக்குத் தெரியாது

ஏன் என்றால்

நான்

கற்றது கையளவு அல்ல

*கடுகளவு* என்பது
உங்களுக்கு தெரியாது

ஒரு மனிதனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை

மன்னிப்பு ஒன்றே ஆகும்

மறக்கத் தெரிந்தவன் மனிதன்

மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன்

மன்னித்து மறக்கத் தெரிந்தவன் மகான்

மன்னித்து,  மறந்து,  மறுபடியும் உதவி செய்பவன் இறைவன்

இறைவனைச் சேரும் வரை இறைவனைப்போல் வாழ்வோம்..

.
மேலும்