சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி?

By News Room

தேவையான பொருள்கள்:

சின்ன  வெங்காயம்   -  200 gram

புளி  - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - 100 gram

குழம்பு மிளகாய்தூள்  - 3 ஸ்பூன்

தக்காளி  - 2

பூண்டு  - 10 பல்

கடுகு   - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள்  - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள்  - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைாயன அளவு

கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலா வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன் புளித்தண்ணீர் குழம்பிற்கு தேவையான தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதித்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான சின்ன வெங்காய குழம்பு ரெடி.

.
மேலும்