தெரிந்து கொள்ள வேண்டிய சாஸ்திர விதிகள்

By News Room

1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.
2.சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
3.தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.
4.முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.
5. உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.
6.அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
7.ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
8.அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.
9.ஆண் குழந்தை பன்னிரெண்டாவது மாதத்திலும்,பெண் குழந்தை எட்டாவது மாதத்திலும் பேசத் துவங்கும்.ஆகவே.பெண் குழந்தைக்கு எட்டாவது மாதத்திலும்,ஆண் குழந்தைக்கு பன்னிரெண்டாவது மாதத்திலும் சாதம் ஊட்டுதல் வேண்டும்.
10.சிகப்பு நிறம் நல்லதிர்ஷ்டத்தைக் குறிக்கும் நிறமாகும்.திருமணத்தின் போது மணமகள் சிகப்பு நிறப் பட்டாடை உடுத்துவது உத்தமம்.சிகப்பு நிற பெட்டியில்,அல்லது பீரோவில், சிகப்பு நிற பையில் பணம் சேர்த்து வைத்தால் அது மென்மேலும் பெருகும்.சிகப்பு நிறம் சோம்பேறிகளை சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும்.
11.தேங்காயைத் தானம் செய்தால் பசுவைத் தானம் செய்த பலன் உண்டாகும்.
12.ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு சமம்.
13.வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும் சந்தோஷம் அடைகின்றனர்.ஆயுளும் விருத்தியாகின்றது.ஆகவே ஆயுளைப் பெருக்கும்  வஸ்திர தானம் மிகவும் நல்லது.(ஆடை தானம்)
14.தேய்பிறை அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் ஒரு வேளை சாப்பிட்டு விரதம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பவர்களுக்கு வியாதிகள் நீங்கும்;உடல் வலிமை அதிகரிக்கும்.
15.சந்திராஷ்டமக் காலங்களில் செம்பருத்தி,அருகம்புல் இவைகளுடன் இடையில் மல்லிகை கட்டி கணபதிக்கும்,
திருமாலுக்கும் மாலையாக அணிவித்தால் பலகாரியங்கள் நல்ல படியாக முடியும்.
16.ஸ்ரீ சரபேஸ்வரர்,கோர்ட் வழக்கு களிலிருந்து நம்மை விடுவிக்கும் தெய்வம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் இவரை வணங்கி வந்தால் வழக்குகளில் வெற்றி உறுதி.
17.வங்கியில் கடன் வாங்க திங்கட்கிழமை உகந்ததாகும்.
18.செவ்வாய் கிழமையன்று கடன் வாங்குவதோ,வட்டி வரும் என்ற நோக்கத்தில் பணம்  வட்டிக்கு விடுவதோ கூடாது.ஆனால்,ஏற்கனவே வாங்கிய கடனில் ஒரு சிறு அளவேனும் செவ்வாய் கிழமையன்று கொடுத்து விட்டால் வெகு விரைவில் கடன் முழுதும் அடைபட்டு விடும்.
19.நீண்ட கால வைப்பு நிதியில் வங்கியில் பணம் போட புதன் கிழமை உகந்ததாகும்.
20.வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்க வியாழன்,வெள்ளி கிழமைகள் உகந்ததாகும்.
மேலும் தங்க பிஸ்கட் வாங்கவும் இவ்விரு நாட்களும் உகந்ததாகும்
21.மாலைச் சூரியனையோ ,
மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக் கூடாது.காலைச் சூரியனை அதுவும் காலை 8.00மணிக்குள்ளேயே கும்பிட வேண்டும்.அதுவும் எப்படி?குளித்து முடித்து ஈர உடம்போடு கும்பிட வேண்டும்.
22.பில்லி,சூனியம்,திருஷ்டி,ஏவல் போன்றவற்றால்,ஏற்படும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள,மகிழம்பூ மாலையை ஸ்ரீ நரசிம்மருக்கு,
சாற்றி சுதர்சனத் துதிகள் ஓதி வழிபட்டிடுக.
23.அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிலோ,எதிரிகள் வீட்டிலோ,விருந்து சாப்பிடும் போது இதைத் தவிர்ப்பது நல்லது.இறைச்சியும்,உளுந்தும் வசியத்துக்கு ஏற்றவை.
குறிப்பாக கோழிக் குழம்பு,உளுந்த வடை ஆகியவைகளுக்கு இந்த சக்தி அதிகம் உண்டு.
24.விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ,திரியை நிமிண்டுவதோ கூடாது.இதனால் வீண் சாபங்களும்,
தோஷங்களும் ஏற்படுகின்றன.
பதிலாக திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.
25.அக்னியை வாயினால் ஊதி அனைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும்.பலர் தற்காலத்தில் பிறந்த நாளன்று மெழுகுவர்த்தி ஏற்றி வாயினால் ஊதி அனைக்கின்றனர்.மனநிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது?இது சரியல்ல.
26.பகலில் போகம்(உடலுறவு) செய்யக் கூடாது.இதனால் சூரிய பகவானின் சீற்றத்திற்கு ஆளாக நேரிடும்.பகல் உறவு மூலம் பாபத்தைத் தேடிக் கொண்டவர்கள்.அக்னி நட்சத்திர காலத்தில் சூரிய பகவானை எண்ணி ஏழைகளுக்கு செருப்பும்,குடையும் தானம் செய்தால் பாபம் நீங்கும்.

.
மேலும்