ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில்

By Tejas

அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் & ஸ்ரீ சோமேசுவரர் திருக்கோவில், 

நங்கவள்ளி, சேலம் மாவட்டம்

இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.

இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

.
மேலும்