உளவியல் சிந்தனை

By News Room

1. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

2. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், இவைகளை ஒரு நாளும் நம்ப கூடாது .

3. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.

4.மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

5.வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

6.முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

7.யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

8. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

9. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

10.சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

11. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்......

.
மேலும்