புதிய கல்விக் கொள்கை-2019 யாருக்கான கல்வி கொள்கை

By News Room

பள்ளிகளில் கற்றுத் தந்த முதல் தந்திரம் அறிவை பணமாக்கும் தந்திரம். செல்வம் வேறு. அறிவு வேறு என்கிறார் விவரம் தெரியாத பழைய வள்ளுவர். " திரு"  வேறு   " தெள்ளிய ராதலும்" வேறு என்கிறார் அவர். 

ஒவ்வொருவர் தலையிலும் அவரவர் சுமக்கும் உலகம் இருக்கிறது. வீடும் வகுப்பறையும் கட்டியமைத்த ஒரு உலகம்.
தலையில் சுமப்பதை இறக்கி வைக்காமல் சமூகம் முன்வைக்கும் பல்வேறு உண்மைகளை பார்க்க முடியாது. 
பெரும்பாலும் அனுபவங்கள்தான் உதவுகின்றன-தலைச் சுமையை இறக்கி வைக்க!

புதிய கல்விக் கொள்கை-2019 யாருக்கான கல்வி கொள்கை இது என்பதுதான் முதல் கேள்வி, அடிப்படையான கேள்வி!!

பெரு நகரங்களில் வசிக்கிற-சவாரி செய்கிற- பிள்ளைகளைப் படிக்க வைக்க குளோபல்ப,இன்டர்நேஷனல் பள்ளிகளை தேடுகிற-உணவை swiggy மூலம் வாங்கிச் சாப்பிடுகிற - பொருள்களை அமேசான் மூலம் ஆர்டர் பண்ணி வாங்குகிற ஐந்து கோடி மேல்தட்டு குடும்பங்களின் சாப்பாட்டுத் தட்டை  நிரப்புவதில் ஆர்வம் கொண்ட கல்வி கொள்கை இது. அதன் பொருட்டு ஓயாமல் தரம், தரம் என்று பேசுகிறது இந்த கல்விக் கொள்கை.

 தரம் என்பது தான் வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை என்பார் டால்ஸ்டாய். மத்திய வர்க்கத்தை மயக்கும் வார்த்தை 'தரம்'. எளிய வீட்டுக் குழந்தைகளை வகுப்பறையிலிருந்து துரத்தும் வார்த்தை ' தரம் '

புத்தகம் - அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல.
ஆசிரியர் - ச.மாடசாமி

.
மேலும்