மஹா பெரியவா சொன்ன கதை

By News Room

ஒருவர் திருச்செந்தூர் முருகனின் பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது.

அந்த கடையின் ஒரு மூலையில், திருச்செந்தூர் முருகன்  படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம்  செய்து விட்டு திருச்செந்தூர் முருகனின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார்.

அவருக்கு ஒரு மகன், அவன், தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண விரும்பாமல், பக்தர் அமைதி காத்தார்.

_காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது. தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

ஆகவே, ஒரு நாள் அவர் அவருடைய மகனிடம், “மகனே! நீ கடவுளை நம்புகிறாயோ இல்லையோ, எனக்கு ஒன்று போதுமானது. நீ கடின உழைப்பாளி, இரக்கமானவன், நேர்மையானவன். உன்னிடம் ஒன்று மட்டும் கேட்டு கொள்கிறேன் செய்வாயா?” என்றார்.

உறுதியாகச் செய்வேன் அப்பா.” என்று கூறினான். “மகனே, என் மரணத்திற்குப் பின், கடையில் இருக்கும் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் படத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது கஷ்டத்தில் நீ எப்போதாவது சிக்கிக் கொண்டால், உன் கையை குவித்து உன்னுடைய பிரச்சனையை ஸ்ரீதிருச்செந்தூர் முருகனிடம் கூறு. நான்  கூறியது போல் இதை மட்டும் செய்து விடு.” என்றார்.

மகனும் சம்மதித்தான். சில  நாட்களுக்குப் பிறகு அப்பா இறந்து போய் விட்டார். காலமும் கடந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. மின்சாரம் வேறு  கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.*_
_திடீரென்று முழுவதும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே ஒரு பையன் ஓடி வந்தான். “அண்ணா, எனக்கு இந்த மருந்து தேவைப் படுகிறது. என் அம்மா மிகவும்  சுகவீனமாக இருக்கிறாள். இந்த மருந்தில் நான்கு ஸ்பூன்கள் உடனடியாக கொடுத்தாக வேண்டும். அதன் பிறகுதான் உன் அம்மாவைக் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் கூறி விட்டார். இந்த மருந்து உங்களிடம் இருக்கிறதா?” என்றான்.

மருந்து சீட்டைப் பார்த்து விட்டு, "என்னிடம் உள்ளது" என்று கூறி மருந்து பாட்டிலை கொடுத்து அனுப்பினான் மகன்.

அந்தப் பையன்  கிளம்பிய உடனே,  கவுண்டரைப் பார்த்தான், வியர்த்து, விறுவிறுத்துப் போனான்!_ 

ஒரு  வாடிக்கையாளர் சிறிது நேரத்துக்கு முன்புதான் ஒரு பாட்டில் எலி விஷத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். கரண்ட் இல்லாததால், லைட் வந்த பிறகு, அதனை சரியான இடத்தில்  வைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டே அதை கவுண்டரில் வைத்து விட்டான்.

ஆனால் இந்த மருந்து பாட்டிலுக்குப் பதிலாக எலி விஷம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்று விட்டான் அந்த பையன். அவனுக்கு  படிக்கவும் கூட தெரியாது. கடவுளே! இந்த சொற்கள் தானாகவே மகனின் வாயிலிருந்து வெளியே வந்தன. இது என்ன பேரழிவு!

அவருக்கு அவர் அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே கைகளை குவித்து, திருச்செந்தூர் முருகன் படத்தின் முன்னே சென்று, கனத்த இதயத்தோடு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்:  

பிரபுவே! அப்பா எப்போதும் வழக்கமாக கூறுவார், நீங்கள் இருக்கிறீர்கள் என்று. நீங்கள் இருப்பது உண்மை என்றால், தயவு செய்து இன்று நடக்கும் கெட்ட நிகழ்வை, தன் மகனின் கைகளில் விஷத்தைப் பெற்று ஒரு அம்மா இறப்பதை நடக்க விடாமல் செய்து விடுங்கள்” என்று இறைஞ்சினான்._

*அண்ணா” அந்த நேரத்தில் ஒரு குரல் பின்னால் இருந்து கேட்டது.“அண்ணா, சேற்றில் நான் வழுக்கி விழுந்து விட்டேன். மருந்து பாட்டிலும் உடைந்து விட்டது! தயவு செய்து வேறு ஒரு பாட்டில் தாருங்கள்.”என்றான் பையன்.

அழகிய புன்னகையுடன் தோற்றமளிக்கும் ஸ்ரீ  திருச்செந்தூர் முருகன் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, மகனின் முகத்தில் கண்ணீர் பாய்ந்தோட தொடங்கியது. ஒரு நம்பிக்கை அவருள் விழித்தெழுந்தது

அதாவது மேலே யாரோ ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்.

சிலர் அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை ஈடு இணையற்றவர் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தி என்றும் கூறுகிறார்கள். சிலர் பேராற்றல், பேரறிவு, என்றும் கூறுகிறார்கள்._

இறைவன் மீது அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்தோடு செய்யப்படும் பிரார்த்தனையானது ஒரு போதும் வீணாகாது என தன்  அனுபவத்தில் உணர்ந்தான் மகன்.
ஓம் சரவண பவ!
Dr. வெங்கட் ND.
மஹா பெரியவா சரணம்
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!!

.
மேலும்