ஆத்மாவை அறிவது எப்படி?

By News Room

ஆதி சங்கரர் ஒரு முறை ஆற்றில் குளித்து விட்டு வெளியே வந்த போது எதிரில் ஒருவர் ஒரு புறம் மீனும் மற்றொரு புறம் இறைச்சிகளும் தொங்க விட்ட படி வந்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஆதி சங்கரர், அந்த அவரிடத்தில் "விலகிப் போ" என்று கூறினார்.

உடனே எதிரே இறைச்சிகளுடன் இருந்த அவன் கேட்டான் "விலகிப் போக வேண்டியது என் உடலா? அல்லது என் ஆத்மாவா?". ஆதி சங்கரருக்கு அப்பொழுது தான் அத்வைதத் தத்துவமே விளங்கியது. இந்த உடல் வேறு, ஆத்மா வேறு. உடல் என்பது ஆத்மா வந்து குடியிருக்கும் ஒரு ஒரு கருப்பை தானே ஒழிய இந்த ரூபமே நான் ஆகாது என்று.

உடனே ஆதி சங்கரர் அந்த சண்டாளன் கால்களில் விழுந்து நீயே என் குரு என்று அவனை குருவாகவே பாவித்தார். பிறகு, இதையே தத்துவ மார்க்கமாக உலகுக்கு போதிக்கத் துவங்கினார் ஆதி சங்கரர். 

"பஜகோவிந்தம்" என்ற பாடலை எழுதி அதாவது, இறைவனை நினைத்திரு மூடனே அதுதான் நிரந்தரமனது. மற்றவை எல்லாம் மாயை என்பதை உலகிற்கு அழகாக விளக்கினார். 

ஆம் இந்த உடல் என்பது வெறும் பிண்டம் தான். அதில் ஆத்மா என்ற ஒரு சலனமற்ற பொருள் தான் எல்லாவற்றையும் உணர்கிறது. அவற்றை நாம் அமைதியாகவும் முழுவதுமாகவும் உணர்ந்து வாழவேண்டும் என்பதையே எல்லா ஆன்மீக தத்துவங்களும் நமக்கு போதிக்கின்றன. நான் என்ற அகங்காரம் விலக நான் என்று நாம் நினைப்பது எதை என்ற ஆத்ம விசாரத்திற்க்கு ஒவ்வொரு மனிதனையும் தூண்டுவது இந்தத் தத்துவமே.

.
மேலும்