நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்: பாரதியின் கவிதை

By News Room

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!’

பாரதியின் புதுமை பெண்ணின் சில கவி வரித்துளிகளே சாட்சி இன்றைக்கு பெண் என்பவள் நூற்றாண்டுகள் தாண்டி சாதனைகள் புரிந்து அன்று  பெண்  ஏட்டுக்கள் தொட்டால் தீட்டு என்ற காலம் சென்று , இன்று சாதனைகளுக்கு இலக்கணமே பெண்ணல்லவா என்று ஆணினமே மெச்ச வைக்கிறது .

வீட்டிற்குள்ளே பூட்டி வைத்த பெண் சமுதாயத்தை தற்போது வானில் சுதந்திரமாக பரப்பதற்கு வித்திட்ட பல போராட்டங்களின் வெற்றி தினமே  மார்ச் 8 ஆம் திகதி உலக மகளிர்தினமாக கொண்டாடி வருகின்றோம்.

தினம் ஒவ்வொரு ஆண்டுகளும் பெண்கள் தினத்தில் மேடையில் பெண்ணுரிமை சமவுரிமை பற்றி கோஷங்கள் எழுப்புகிறார்கள்  ஆனால், மனதளவில் நிறைய ஆண்கள் இன்றும் பழமை பேணும் காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள். நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை ஒரு ஆணின் வெற்றிக்கு  பின்னால் பெண் இருக்கிறாள் என்பது உருமாறி பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண்  இருக்கிறான் என்று பெருமைப்பட வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று பேசுபொருளாக இருப்பவர்  இலங்கையின் முதல் பெண் பொலிஸ்  DIG பீமாஷணி ஜெசின் ஆரச்சி . இந்த துறையை இவர் அடைய அடைந்த துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல . இந்த பதவிக்கு இவரை தெரிவு செய்யாமல் இருக்க சுமார் 20 ஆண் பொலிஸ்கள் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் ஒரு பெண் என்ற ஒரே காரணத்தால் அவரின் கீழ் வேலை செய்ய தயங்கும் சிலர் இவ்வாறு செய்திருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக இலங்கையில் 90% வீதமான பெண்கள் பொது போக்குவரத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்று UNFPA அமைப்பு அறிக்கையிட்டுள்ளது. சிறுமி முதல் தாய்மார்கள் வரை இந்த தொல்லைக்கு ஆளாகின்றனர்.  
பெண் என்பவள் யார் ?அவளின் உடலில் ஏற்படும்  மாதவிடாய் மாற்றம் என்றால் என்ன ? அவளின் தாய்மை எவ்வாறு இருக்கும்? அவளையும் மதிக்க பழக வேண்டும் !

இவ்வாறான காலத்தின் தேவையான விடயங்களை வளரும் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் அனைவர் மீதும் தலையாய கடமையாகும்.

.
மேலும்