நம்பிக்கையால் நடக்கும் அற்புதங்கள்

By News Room

ஒரு பெண் தன் தோழியின் வீட்டிற்குச் சென்று, மாலை நேரம் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, 

கொஞ்சம் நேரமாகி விட்டது. தனியாக நடந்து வர வேண்டிய சூழ்நிலை ஆகியிற்று. 

சில வீடுகள் தள்ளி தான் வசித்து  வந்ததால் அவளுக்கு பயம் ஒன்றுமில்லை.

வண்டி(பைக்) போகும் பாதையிலே செல்வி நடந்து  சென்றாள். 

கடவுளிடம் அபாயம் ஒன்றுமில்லாமல் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

ஒரு குறுக்குச் சந்தில் சென்று கொண்டிருக்கும் போது, 

பாதை முடிகின்ற இடத்தில் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். 

அவளுக்காக காத்து கொண்டிருந்தான் போல் தெரிந்தது.

மன சஞ்சலத்துடன், 

கடவுள் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக பிரார்த்தனை செய்தாள். 

பாதை முடிவிற்குச் சென்றவுடன், 

நின்று கொண்டிருந்த மனிதனைத் தாண்டி நடந்தாள். 

வீட்டிற்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாள்.

அடுத்த நாள், 

செய்தித்தாளில் ஒரு பயங்கரமான செய்தியைப் படித்தாள், 

அவள் நடந்து வந்த அதே குறுக்குச் சந்தில், 

முன் தினம் மாலை ஒரு சிறிய பெண் பலாத்காரம் செய்யப் பட்டாள் என்பது தான் செய்தி. 

துக்கத்தில் மூழ்கியிருந்த இந்தச் சிறுமி பயந்து போய் அழ ஆரம்பித்தாள். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்றாள்.

அந்த மனிதனை அடையாளம் காண்பிக்க முடியும் என்ற தைரியத்துடன் அங்கு சென்று தன் கதையைச் சொன்னாள். 

காவல் நிலையத்தில் வரிசையாக நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

அதிலிருந்து முன் நாள் மாலை அவள் பார்த்த மனிதனை அடையாளம் காட்ட முடியுமா என்று காவலர் கேட்டார்.

அவள் அதற்கு ஒத்துக் கொண்டு அவனை அடையாளம் காட்டினாள். 

அந்த மனிதன் உடனடியாகத் தன் தப்பை ஒத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

காவல்துறை அதிகாரி அவளுடைய வீரமான செயலுக்கு நன்றி கூறி, 

ஏதாவது  உதவி வேண்டுமா என்று கேட்டார்.

அதற்கு செல்வி, 

“அவன் ஏன் என்னை ஒன்றும் செய்யவில்லை” என்று வியப்புடன் கேட்டாள். 

அந்த மனிதனைக் கேட்ட போது அவன் சொன்ன பதில் 

“அவள் தனியாக இல்லை, 

இரண்டு உயரமான மனிதர்கள் அவளின் இரு பக்கமும் இருந்தார்கள்.”

இது தான் பிரார்த்தனைக்கு இருக்கும் சக்தி

நம்பிக்கை இருந்தால் மலைகள் கூட நகரும். 

கடவுள் எப்பொழுதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தால், 

எந்த சமயமும் அவர் காப்பாற்றுவார். 

அவர் நம் ஹ்ருதயத்தில் எப்பொழுதும் இருக்கின்றார். 

அதிகமான அன்பை எல்லா  சமயத்திலும் பொழிவார். 

துன்பங்கள் வரும் போது,

மனதளவில் உண்மையாக வேண்டிக் கொண்டால், 

அவர் நம் உதவிக்குக் கட்டாயமாக வருவார்

.
மேலும்