தலைக்கனம் கூடாது ஏன்?

By News Room

🌹 சீதையை கண்டுபிடித்து, ராமன் வருவான், சிறைமீட்பான் என அன்னைக்கு சொல்லி, அவளிடம் ஆசியும் அவளை சந்தித்தற்கு அடையாளமாய் சூடாமணியை வாங்கிக்கொண்டு வானத்தில் பறந்துக்கொண்டிருந்த அனுமனுக்கு  தலைக்கனம் உண்டானதாம்.

🌹 சீதையை கண்டுபிடிக்க ராமனால் முடியாதபோது,  தன்னால் முடிந்ததென..,  இதை உணர்ந்த  ராமன், அனுமனுக்கு இது அழகல்ல என நினைத்து அந்த தலைக்கனத்தை அழிக்க நினைத்தார். 

🌹 அனுமன் நீராட செல்லும் குளத்தினருகில் முனிவர் ரூபத்தில் ராமன் காத்திருந்தார். அங்கு வந்த அனுமன் தன்னுடைய உடைகளையும், நகைகளையும் குளித்து வரும்வரை பாதுகாத்து தரமுடியுமாவென கேட்டார். அப்படி வைத்துவிட்டு போ என்றார். சுவாமி, மற்ற பொருட்களை கீழே வைக்கலாம். ஆனால் இந்த சூடாமணி அன்னை சீதை தந்தது. அதை கீழே வைக்கமுடியாது என மறுத்தார். அத்தனை புனிதமென்றால்  இந்த கமண்டலத்தில் சூடாமணியை போட்டுவிட்டு போ என சொன்னார்.  அப்படியே, கமண்டலத்தில் சூடாமணியை போட்டுவிட்டு குளித்து திரும்ப வந்து முனிவரிடம் சூடாமணியை அனுமன் கேட்டார். கமண்டலத்தில் உள்ளதை நீயே எடுத்துக்கொள் என்றார் முனிவர்.  கமண்டலத்தினுள் கைவிட்ட அனுமனுக்கு பயங்கர ஷாக் . ஏன்னா, உள்ள ஏகப்பட்ட சூடாமணிகள் இருந்தது. சுவாமி! சீதை ராமனிடம் சேர்ப்பிக்க சொன்ன சூடாமணி எங்கே?! மிக புனிதமானது அது. அப்படியிருக்க, இந்த கமண்டலத்தினுள் அதேப்போன்ற சூடாமனிகள் வந்ததெப்படி என அனுமன் கேட்டான்.  எனக்கென்னப்பா தெரியும்?! உன்னைப்போல நாலஞ்சு வானர  வீரர்கள் வந்து இதையேதான் சொல்லிவிட்டு, சூடாமணியை கமண்டலத்தில் போட்டுவிட்டுப் போனார்கள்!" என்றதும் அனுமனுக்கு தலைக்கனம் மறைந்து உண்மை புரிந்தது. ராமனை தியானித்து. அனைத்துக்கு சூத்ரதாரியான நீங்கள் இருக்கும்போது என்னால்தான் அன்னையை காணமுடிந்தது என்ற எண்ணம் எனக்கேற்பட்டது தவறு என மன்னிப்பு கேட்டதும், மற்ற சூடாமணிகள் மறைந்து சீதை தந்த சூடாமணி மட்டுமே அனுமன் கையில் மிச்சமிருந்தது.

🌹 பக்திக்கும் பணிவுக்கும் உதாரணமாய் திகழ்ந்த அனுமனுக்கே தலைக்கனத்தால் சிறிது நேரம் மனம் பதைபதைக்க முடிந்ததென்றால் அற்ப பிறவிங்க நாமலாம் நான், எனது, என்னுடைய, என்னால்..ன்ற எண்ணத்தினால் என்ன சாதிக்க முடியும்?!

.
மேலும்