பக்தி என்றால் என்ன?

By saravanan

அழியக்கூடிய பொருள் மீது பற்றை விட்டுவிட்டு, என்றுமே அழியாத “பரம்பொருள் மீது பற்று வை.  அப்படி செய்தால், அழியக்கூடிய இந்த நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது”.

*பகவானை விரும்பினால், மற்ற விருப்பங்கள் உன்னை விட்டு விலகி விடும்*.

பகவானின் தெய்வீக சொரூபத்தினிடத்திலும், ஆத்ம குருவினிடத்திலும் செலுத்துகின்ற அபரிமிதமான அன்பிற்கு “பக்தி” என பொருள். 

அன்பு செலுத்தாமல் யாரும் ஆத்மாவை அறிய முடியாது. அன்பே சிவம் என்று *அறியாதவற்கு* ஆத்ம ஞானம் வராது. 

அன்பு இல்லாமல் பக்தி இல்லை, பக்தி இல்லாமல் கர்மம் இல்லை, கர்மம் இல்லாமல் யோகம் இல்லை, யோகம் இல்லாமல் உடல், மனம் ஆரோக்கியம் இல்லை, ஆரோக்கியம் இல்லாமல் அறிவு இல்லை. அறிவு இல்லாமல் ஞானம் இல்லை. ஞானம் இல்லாமல் அந்த பரமாத்மனை அறிய முடியாது.

சாஸ்திரம் படித்தவர்களும், ஞானம் உடையவர்களும் மட்டுமே பகவானை அணுக முடியும் என்பது இருந்தால், பகவான் என்பவன் சாதாரணமான பாமரனால் அணுக முடியாதவனாகி விடுவான். 

எனவே, பகவானிடம் காட்டப்படும் *உயர்ந்த அன்பே* “பக்தி” எனப்படும். 

அன்பின் அடிப்படையில் அமையும் பக்தியின் ஆழத்தை எந்த சூழலிலும் பிரித்து அறிய முடியாது. 
தேவையற்ற சுகங்களில் அதிக ஆர்வம் செலுத்தும் மனிதன் பகவான் மீது பக்தி செலுத்த தவறுகிறான்.

மனிதர்கள் தங்களது கடமை, தவம், கர்மபலன், உயர்ந்த சிந்தனை, லட்சியம், எல்லாம் ஆத்மா, பரமாத்மாவை அறிந்து கொள்வதற்காகவே அமைத்துக்கொள்ள வேண்டும்  அப்படிப்பட்ட அறிவு உயர்ந்த பக்தியினால் சுலபமாக உருவாகிறது. 

.
மேலும்