திருச்சிற்றம்பலம்! - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்)

By nandha

நாடுடைய  நாதன்பால்  நன்றுஎன்றும்
     செய்மனமே  நம்மை  நாளும்
தாடுடைய  தருமனார்  தமர்செக்கில்
     இடும்போது  தடுத்துஆட்  கொள்வான்
மோடுடைய  சமணர்க்கும்  முடையுடைய
      சாக்கியர்க்கும்  மூடம்  வைத்த
பீடுடைய  புலியூர்ச்சிற்  றம்பலத்துஎம்
       பெருமானைப்  பெற்றாம்  அன்றே.

பொருள்:
 
மனமே! விரும்புதலை உடைய இறைவனிடத்து, எப்பொழுதும் நன்மையே செய்து ஒழுகுவாயாக! உயிர்களை அதன் போக்கில் விடாது, தடுத்து வருத்தும் எம தூதர்கள் 'செக்கில் இடுதல்' போன்ற துன்பங்களை நாளும் தருகின்றபோது, அப் பெருமானே வந்து தடுத்து ஆட்கொள்வான். 

முடை நாற்றம் வீசும் குளிக்காத உடம்பு உடைய சமணர்களும், முரட்டுத் தனமுடைய பௌத்தர்களும், ஆகிய இவர்களுக்கு, அறியாமையைக் கொடுத்து, வினைகளைக் கழிக்க வைக்கும், பெருமை பொருந்திய பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தில் பெற்றுவிட்டோம்.

 திருச்சிற்றம்பலம்! 

.
மேலும்