பணக்காரக் கோவில்

By News Room

சற்றேறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பணக்கார கோவிலாகத் திகழ்ந்த மூலஸ்தான் #சூரியனார்_கோவில்.. பாகிஸ்தானில் இப்போது இந்த நகரை #மூல்டான் என்று அழைக்கின்றனர். 

இங்கு காந்த சக்தியால் அந்தரத்தில் தொங்கிய அதிசய சூரியன் விக்கிரகம் அலெக்ஸாண்டரை அசரவைத்தது என்று கிரேக்க, மற்றும் அராபிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 

மூல்டான் பற்றி தொல்பழங்காலக் குறிப்புகளும் கிடைக்கின்றன.
கிரேக்க நாட்டு ராணுவ தளபதியான் ஸ்கைலாக்சும் இது பற்றி எழுதியிருக்கிறார். 

அவர் முதலாம் டேரியஸ் மன்னன் (கி.மு.550 – 486) காலத்தில் பஞ்சாபுக்கு வந்தார். 

காஸ்யபபுரம் பற்றி ஹெரோடோட்டஸ், டாலமி ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர் என அறியப்படுகிறது. 

மூல்டான் கோவிலுக்கு வந்த அலெக்ஸாண்டர் அங்குள்ள கலைக்கோவிலைக் கண்டு அசந்தே போய்விட்டார். அந்தக் கோவில் விக்ரகம் பல காந்தக் கற்களின் உதவியால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். 
மூலஸ்தான் சூரியதேவனார் கோவில் பற்றி 1200 ஆண்டுகளுக்கு முன் சீன யாத்ரீகர் #யுவான்சுவாங்கும் சூரியனார் சிலை சொக்கத் தங்கத்தினால் ஆனதெனவும், ஏராளமான ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
மூல்டானில் வேறு இரண்டு கற்சிலைகளும் இருந்தனவெனவும் அவற்றின் பெயர் ஜுன்புகாத், சூன்புகாத் (துவார பாலகர்கள்??) பள்ளத்தாக்கின் இரண்டு பக்கமும் 80 கஜ இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன எனவும். இந்த சிலைகளை வெகு தொலைவிலிருந்தே காண முடியும் ஏனவே.பக்தர்கள் மரியாதை காரணமாக  வண்டியில் இருந்து இறங்கி வெறும் கால்களால் நடந்து கோவிலுக்கு வருவர் எனவும் கூறப்படுகிறது..

இது பற்றி சிந்து ராஜ்ய வரலாறு என்னும் புத்தகத்தில் #டாக்டர்_மும்தாஜ் என்ற பாகிஸ்தானிய எழுத்தாள பெண்மணி எழுதியுள்ளார்.

(கிருஷ்ண பகவானால் சபிக்கப்பட்ட அவரின் மகன் சாம்பன், தொழு நோயிலிருந்து மீள, சந்திரபாகா நதிக்கரையில் சூரியபகவானுக்கு ஒரு கோயில் கட்டி பிரியமாக வணங்கினார். அதுவே சூரியனுக்கு உரிய முதல் கோயில் என புராணங்கள் கூறுகின்றன).

#ப்யாரீப்ரியன்..
இணையத்திலிருந்து..

.
மேலும்