குன்றத்தூர் முருகன் கோவில் - வரும் ஏப்ரல் 25-ம் தேதி

By Senthil

சென்னை (காஞ்சிபுரம் மாவட்டம்) அருகே அமைந்துள்ள குன்றத்தூர் முருகன் கோவில் மற்றும் திருநாகேஸ்வரசாமி கோவில்கள். இந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயங்களுக்கு வரும் ஏப்ரல் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டில் முருகன் கோவில்கள் ஏராளமாக உள்ளன. முருகனின் ஆறுபடை வீடுகளையும் நாம் அறிவோம். ஆனால் குன்றத்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இருந்து வேறுபட்டது. குன்றத்தூர் முருகன் கோவில் வடக்கு திசை நோக்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற முருகன் கோவில்கள் எதுவும் வடக்கு திசை நோக்கி இல்லை. இதுதான் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. திருப்பூரில் இருந்து திருத்தணிக்கு வந்த முருகன் குன்றத்தூரில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 

12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில். 1726 ஆம் ஆண்டில், மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. இக்கோயில் 84 படிகளுடன் கட்டப்பட்டது. முருகன் இரு மனைவிகளுடன் காட்சியளித்தாலும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணுடன் வாழ பக்தர்களுக்கு போதிக்கிறார். குன்றத்தூர் மலையில் முருகப்பெருமானும் அவரது இரு துணைவியரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத் திருத்தலத்திற்கு வரும் ஏப்ரல் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

.
மேலும்