கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார தலம்.

By News Room

ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயம் தாம்பரம் –செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால்  வருகின்றது நம்பர் 50,  கொளத்தூர் கிராமம். 

அங்கங்கே கோவிலுக்குச் செல்லும் பாதையை நமக்கு காட்டுகின்றது வழிகாட்டிப் பலகை. அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் சென்றால் இந்த திருத்தலத்தை அடைந்துவிடலாம். 

சிங்கபெருமாள் கோவிலில் இருந்து பேருந்து வசதி கிடையாது.  தனிப்பட்ட வாகனம் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
 
விக்ரம சோழன் காலத்தில் சீறும் சிறப்புமாகத் திகந்த இத் திருக்கோவில் கருங்கல் செங்கல்லால்
கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.  

அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். 

கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,
அகத்தியருக்கு அர்த்தனாரீசுவரராய் காட்சி கொடுத்தார். 

கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டுமென்றும், அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஏதோ ஒரு , வைராக்கியத்தால் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த   ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார். 

ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில், சந்திர ஓரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது விசேஷமாகும்.

.
மேலும்