திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமான்

By News Room

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் 'செவ்வாய் தோஷம்' என்று கருதப்படும்.

அவர்களுக்குத் திருமணத்தடை, புத்திரப் பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவை ஏற்படலாம்.

அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய்க்குரிய பரிகாரத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம்  பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

பொருள்

உக்ரம் என்கிற மந்திரத்தில் நரசிம்மனை உக்கிரமாக சொல்கின்றது. வீரியத்தை உடையவராக இருப்பதால் வீரியம் என்று சொல்கிறது. அவன் தான் மகாவிஷ்ணு என்பதை அடுத்த பதத்தில் காட்டுகிறது. ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து நிற்கும் அவற்றைக் காட்டிலும் பெரிதாக பிரகாசிப்பவன் என்பதால் அவனை ஜ்வலந்தம் என்று சொல்லி, எல்லாவிடத்திலும் அவன் நிறைந்திருக்கிறான்; எங்கும் அவனைக் காணலாம்; அவன் முகத்தை எந்த இடத்திலும் பார்க்கலாம் என்பதால் ஸர்வதோமுகம் என்கிறது..

இவரிடம் உள்ள அச்சத்தினால் சூரியன் உதிக்கின்றான். சந்திரன் சொல்படி கேட்கின்றான். வாயு வீசுகின்றான். அக்கினி உஷ்ணம் தருகின்றான்.  வருணன் மழையைப் பொழிகின்றான். எனவே இவனை பத்ரம் என்கின்ற சொல்லினால், சர்வ மங்களங்களுக்கும்  காரணமானவன் என்று உபநிஷத் சொல்லுகின்றது. ம்ருத்யு  ம்ருத்யும் என்பதால்  பிறப்பு இறப்பு துக்கத்தைப் போக்குபவனாகிய நரசிம்மனை நமஸ்தரிக்கிறேன்

.
மேலும்