மகாத்மா காந்தியின் சுயசரிதை

By News Room

மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை
V. நாகலட்சுமி
50/100/2022
#22/Rm/183.

நாம் வாழ்கின்ற இன்றைய சமுதாயத்தில் அரசியல், பொருளாதாரம், சமுதாயம், மற்றும் சமயச்சிக்கல்கள் மக்களை திணறச் செய்கின்றன. பலர் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்.இறைவனின் மீது அசையாத நம்பிக்கை கொண்டு சோதனைகளை கண்டு அஞ்சாமல் செயல்படுபவர்கள் தங்களது வாழ்க்கையை சாதனைகளாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. எந்தவிதமான ஒளிவோ, மறைவில்லாத திறந்த புத்தகமாக இருப்பது அவரது வரலாறு.
 உள்ளம், செயல்,பேச்சில் எல்லாவற்றிலும் தூய்மை இருப்பதால்தான் எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஐந்து பாகங்கள், 605 பக்கங்களில்
தமது சுயசரிதையை மகாத்மா காந்தி அவர்களால் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு ஆங்கில வடிவம் பெற்று, தமிழாக்கமாக 
எழுதப்பட்டிருக்கிறது.

அவர் தமது தந்தையை சத்திய சீலர்,தீரமானவர், தயாள குணம் உள்ளவர்,என்று கூறிவிட்டு 40 வயதிற்கு மேல் நான்காம் தாரம் மணந்து கொண்டவர் என்று கூறுகிறார்.

தாயாரை தவஒழுக்கமும், மிகுந்த மதப்பற்றும் கொண்டவர் என்றும், நோயுற்றிருந்த போதும் தவறாமல்விரதங்கள் இருப்பார், என்றும் அனுபவ ஞானம் உள்ளவர் என்றும் குறிப்பிடுகிறார்.

தமது ஆசிரியர்களை பற்றி குறிப்பிடும் பொழுது பல குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை என்றும் குறிப்பிடுகிறார். பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு  அவர்களுடைய செய்கைகளை கவனிக்காமல் இருந்துவிட கற்றுக் கொண்டதாக எழுதி இருக்கிறார்.
அவருடைய 13 வது வயதில் திருமணம் நடந்ததை வேதனையுடன் கூறியதுடன், மனைவியை தன்னுடைய
அனுமதியின்றி எங்கும் போகக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் அதிகப்படியாக விதித்தது,
பற்றி வருத்தப்பட்டு இருக்கிறார்.
திருடுதல்,
புகைப்பிடித்தல், புலால் உண்ணுதல்,என்று தீய பழக்கங்களுக்கு சில நாட்கள்அடிமையாக
இருந்து பிறகு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்கும் தைரியம் வராமல் பிறகு தனது எல்லா குற்றங்களையும் ஒரு கடிதத்தில் எழுதி தந்தையிடம் கொடுத்து தக்க தண்டனையை தருமாறு கேட்டதாக குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டருக்கு 
படிப்பதற்காக பல சிரமங்களுக்கிடையில்
புறப்பட தயாராகும் பொழுது தாயின் அனுமதி மட்டும் கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் மதுபானம், பெண்,மாமிசம் ஆகியவைகளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு பிறகு புறப்பட்டு சென்றதாக கூறுகிறார். அங்கே சென்ற பிறகு பல சமயங்களில் உணவு கிடைக்காத பொழுதும், ஆகாரம் ருசியற்றவையாக இருந்த பொழுதும், தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்தை அவர் கடைசி வரை மறக்கவே இல்லை.

பாரிஸ்டர் பட்டம் பெற்று பம்பாய் வந்த பொழுது அவருடைய தாய் இல்லை, என்ற பொழுதிலும் இறுதிவரை அவர் செய்து கொடுத்த சத்தியத்தை தவறவிடவில்லை.
பாரிஸ்டர் என்ற முறையில், கம்பெனியின்  வழக்கிற்காகதென்னாபிரிக்கா விற்கு சென்று
டர்பன் என்ற நகரத்திலிருந்து ரெயிலில் நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் செல்லும் பொழுதும், ஜோகன்ஸ்பர்க்கிற்கு
கோச் வண்டியில் செல்லும் பொழுதும்
ஏற்பட்ட அவமானங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கையில் நடந்த அத்தனை
சம்பவங்களும் முக்கியமானவைகள்.
படிப்பதுடன் நிறுத்தி விடாமல், அவரைப்பின்பற்றி சிறிதளவாவது வாழக்
கற்றுக் கொள்வோம்.

.
மேலும்