நூல்: கண்பேசும் வார்த்தைகள், ஆசிரியர்: நா.முத்துக்குமார்

By News Room

கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் பாடல்களில் சில பாடல்களை தேர்ந்தெடுத்து அந்த பாடல் எப்படி அவருக்கு கிடைத்தது. அந்த பாடல் வரிகள் தோன்றிய விதம். அந்த பாடல் வரிக்கும் அவருக்கும் நடந்த தொடர்பு. அந்த பாடலோடு அவருக்கும் இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கும் உண்டான தொடர்பு என்று நா.முத்துக்குமார் அவர்களே அதனை கூறுவது இப்புத்தகத்தின் சிறப்பு. 

இதோ இந்நூலில் கூறப்பட்டுள்ள சில பாடல்கள் நீங்கள் முணுமுணுக்க...

✓கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
✓காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
✓லஜ்ஜாவதியே
✓சென்னை செந்தமிழ்
✓தேரடி வீதியில் தேவதை வந்தா
✓செல்லாமாய் செல்லம் என்றாயடி
✓அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
✓கொக்கு பற பற
✓விழாமலே இருக்க முடியுமா?
✓ரகசியமாய் ரகசியமாய்
✓எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் படிக்குமே
✓ஓர் ஆயிரம் யானை கொன்றால்
✓தேவதையைக் கண்டேன்
✓காதல் யானை வருகிறான்
✓உனக்கென இருப்பேன்
✓கண் மூடித் திறக்கும்போது
✓கொடுவா மீசை அருவா பார்வை
✓சுட்டும் விழிச்சுடரே
✓நினைத்து நினைத்து பார்த்தேன் 

காதல் படத்தில் வரும் "உனக்கென இருப்பேன்" பாடலுக்காக அவரும் பேருந்தில் இரவு சென்னையில் இருந்து திண்டிவனம். பிறகு திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு போய் வந்து தான் எழுதியுள்ளார். 
சாப்பாட்டுக்காக இரவு பேருந்து நிறுத்தியபோது. நெடுஞ்சாலை சாலையில் உள்ள புளியமரங்களோடு நிலவையும் மின்மினி பூச்சுகளை கண்டுள்ளார். 

"நிலவொளியை மட்டும் நம்பி இலையெல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்" வரி அங்கிருந்து எடுத்தது தான்.

"ரகசியமாய் ரகசியமாய்" பாடலை கேட்டு பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரந்ததும் அவரை வீட்டிற்கு அழைத்து மரியாதை செலுத்தியது.

"ஓராயிரம் யானை கொன்றால் பரணி" பாடல் பிடித்துபோன பாலா கைக்கடிகாரமும் சட்டையும் பரிசளித்தது. 

ஊரின் பெயர் பலகையை பார்த்துவிட்டு பிடித்துப்போய் ஊட்டியில் முன்பின் தெரியாத ஊருக்கு தனியாக பஸ் ஏறிச்சென்று காட்டில் தனியாக நடந்து சென்ற போது தோன்றிய வரிகள். "காட்டிலே காயும் நிலவு கண்டுகொள்ள யாருமில்லை... தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை".

"தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை" பாடல் வரிகள். பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க தனியாக மனைவியுடன் வாழும் எண்பது வயது தாத்தா ஒருவர் கூறக்கேட்ட கதைகள் என்று...

நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு முன்னும் பின்னும் பாடல் எழுதும் போது நடந்த நிகழ்வுகளே இந்தப் புத்தகம்.

நா‌.முத்துக்குமாரை உயிரோடு இருக்கும் போது கொண்டாடாமல் போன கோடான பேரில் நானும் ஒருவன். 

அந்த வகையில் பிராயச்சித்தம் செய்ய இப்போது; நான் அவரிடம் பேசிக்கொள்வதாகவே அவர் நூல்களை வாசிக்கிறேன். ஆம் அவர் எழுதிய நூல்கள் நம்மோடு பேசவே செய்யும். ஏற்கனவே நா.மு. வின் எழுத்து நடை எனக்கு பரிச்சயமானதால் வாசிக்கவும் நேசிக்கவும் இதமாக இருந்தது. 
______________________________
~ நூல்: கண்பேசும் வார்த்தைகள்
~ ஆசிரியர்: நா.முத்துக்குமார்
~ பதிப்பகம்: Discovery Book Palace 
~ பக்கங்கள்: 118
~ விலை: 140₹
______________________________

.
மேலும்