கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

By News Room

கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

எழுத்து வடிவம் - ஜோதி நரசிம்மன்
பதிப்பகம் - கிழக்கு
பக்கங்கள் - 144


புத்தகத்திலிருந்து: "இது ஒரு திரைமறைவு த் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் 'விபச்சார அழகி கைது' என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள். உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. 


ஜோதி நரசிம்மன் அவர்களின் எழுத்து வடிவில் படிக்கும் இரண்டாம் நூல் இது. அவரின் முதல் நூல் விமர்சனத்தை இந்த லிங்கில் பார்க்கலாம். 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?' இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது". இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கி விடுகிறார்.இந்நூலை படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது.... 
ஜோதி நரசிம்மன் அவர்களின் எழுத்து வடிவத்தில் படித்த இரண்டாம் புத்தகம் இது. முதல் புத்தகமான "அடியாள்" சென்ற வருட மாரத்தான் போட்டியில் படித்தேன்.

.
மேலும்