நூல்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

By News Room

நூல்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஆசிரியர்: ஜெயகாந்தன் 

ஜெயகாந்தன் அவர்களின் சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை ரொம்ப நாளா படிக்கனும்-னு நினைச்சிட்டு இருந்தேன். இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் நிறைய இடங்களில் இந்த நாவல் கண்ணுல பட்டிச்சி. ரொம்ப ஆர்வத்துல படிச்சாச்சி ஒரு வழியா. கிருஷ்ணராஜபுரத்திற்கு ஒரு டூர் போய்ட்டு வந்த பீலிங். அருமையான ஒரு பயணம் இந்நாவல்.

எந்த ஊர், பெற்றோர் என்ன சாதி,  எதுவும் தெரியாத, எந்த கவலையும் கொள்ளாத ஹென்றி எதிர்கொள்ளும் மனிதர்கள் தான் இந்த நாவல். அனைத்து கதாபாத்திரங்களும் நேர்மறை. அதுவும் இவ்வளவு சுவாரஸ்யமாக. சபாஷ்.

பெங்களூரில் இருந்து வந்த ஹென்றி, தன் தந்தை முன்பு வாழ்ந்த பாழடைந்த வீட்டை புதுப்பித்து அதில் குடியேறுவதே இந்த நாவலின் கதை. 

ஒரு அன்பான, எல்லோருடனும் ஒரு அஜஸ்ட்டிவாக ஒத்து செல்கிற, ஆடம்பரமில்லாத, நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கிற, ஆர்ப்பாட்டம் இல்லாத அதே சமயத்தில் குதூகலமான  கதாபாத்திரம் தான் இந்த ஹென்றி. அவ்வளவு அருமையான பாத்திரம். 

அனைத்து கதாபாத்திரங்களின் சம்பாஷணைகளுமே அருமையான ரகம். ஹென்றியின் பெற்றோர், புது நண்பர் தேவராஜன், அவரின் அக்கா அக்காம்மாள், ஹென்றியின் சித்தப்பா துரைக்கண்ணு, சித்தி, சின்னபையன் மண்ணாங்கட்டி, லாரி கிளீனர் பாண்டு, டீ கடை தேசிகர், ஐயர், பூசாரி, அப்புறம் மர்மம் விலகாத ஏஞ்சல் பேபி என எல்லா கதாபாத்திரங்களும் அருமை.

.
மேலும்