டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - நியூஸிலாந்து மோதல்

By Ezhumalai

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கென்று, உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியை நெருங்கியுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. 

இந்தப்போட்டி நாளை (ஜூன் 18, வெள்ளிக்கிழமை) சௌத்தாம்டன் நகரில், இந்திய நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி வீரர்களும் இந்தக் கோப்பை வெல்லும் உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

உலக கிரிக்கெட் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது இந்த டெஸ்ட் போட்டி.

.
மேலும்