வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களை நீக்க எலான் மஸ்க் உத்தரவு -10,000 டெஸ்லா ஊழியர்கள் வேலை இழக்கின்றனர்!!

By Senthil

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க், தன்னுடைய நிறுவனத்தில் பகுதி அளவு பணியிடங்களை நீக்குமாறு புதிய ஆட்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இப்பொது இருக்கும் பணியாளர்களில் 10% ஆட்களை குறைக்க வேண்டும் என்று மஸ்க் அறிவுறுத்தி உள்ளார்.

 மேலும் உலகில் உள்ள தம்முடைய தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் புதியதாக யாரையும் பணியமர்த்த வேண்டாம் என்றும் மஸ்க் ஆணையிட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தில் வர்க் பிரம் ஹோம்-ஐ சமீபத்தில் தடை செய்த அவர், தற்போது 10% ஆட்குறைப்பு செய்ய வலியுறுத்தி நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.

 தன்னுடைய உத்தரவிற்கு பிறகும் அலுவலகங்களுக்கு திரும்பாமல் வீட்டில் இருந்தபடியே பணிகளை தொடரும் ஊழியர்கள் வேறு இடங்களில் வேலை தெடிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்லாவில் உலகம் முழுவதுமாக சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அதில் 10,000 பேர் தற்போது வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

.
மேலும்