சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி திடீர் சந்திப்பு

By Senthil

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும்,  நடிகையுமான விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.  

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

இந்நிலையில், விஜயசாந்தி-சசிகலா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சசிகலாவிடம் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை என்றும் நட்புரீதியாக சந்தித்து பேசியதாகவும் விஜயசாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.
மேலும்