நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

By Ezhumalai

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்குத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகள்: 

1. நீட் தேர்வு முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், அதை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்.
 
2. நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பிற மாநில அரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்காக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்.

3. தற்போது எம்.பி.பி.எஸ் இடங்களில் 15%, முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் 50% , சிறப்புப் படிப்புகளில் ( Super Speciality courses ) 100% இடங்களை தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளித்து வருகிறோம். அதை உடனடியாக நிறுத்தவேண்டும். 

4. நீட் போன்ற நுழைவுத் தேர்வை பிற பட்டப் படிப்புகளுக்குக் கொண்டுவருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும் 

.
மேலும்