காகிதத்தால் ஆன தேசிய கொடியை பயன்படுத்தவேண்டும்: மத்திய அரசு உத்தரவு

By Senthil

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு கடிதம் எழுதியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய கொடி என்பது நாட்டு மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தேசிய கொடிக்கு உரிய மரியாதையும், கண்ணியமும் அளிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், தேசிய கொடி பயன்பாடு தொடர்பான சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசு அமைப்புகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம்.

இந்திய கொடி சட்டத்தின்படி, காகிதத்தால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை மட்டுமே முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் பயன்படுத்துவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அந்த தேசிய கொடிகளை அப்படியே தரையில் வீசி எறியக்கூடாது. கொடிக்கான மரியாதையுடன் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இதை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை உள்துறை அமைச்சக இணையதளத்தில் பார்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.
மேலும்