ஜெனரேட்டர்கள் பயன்படுத்த டெல்லியில் தடை

By saravanan

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாய கழிவுகள் எரிப்பு மற்றும் போக்குவரத்தால் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

கரோனா காலத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்தபோது காற்று மாசு குறைந்தது. அதன்பிறகு தளவுகள் அளித்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

எனவே, மின்சாரத்திற்காக டீசல், பெட்ரோல், கெரோசின் ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களுக்கு டெல்லி அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. ஆனாலும், அவசர சேவைகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
 

.
மேலும்