காது குத்துவதன் பின்னணியும், அதன் அறிவியல் உண்மைகள்!!

By Senthil

நம் முன்னோர்கள் காலம் காலமாக தங்களின் குழந்தைகளுக்கு குளதெய்வ கோவில்களுக்கு சென்று மொட்டை அடித்து, காது குத்து அதனை ஒரு விழாவாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இது எதற்கு, அதன் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியமா இது வாங்க பார்ப்போம்....

காது குத்து இந்து மதத்தை பொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கும் காது குத்தப்படுகிறது இந்த சடங்கிட்ற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது .

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக காது விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்படுகிறது.

காது குத்திய பிறகு தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். அப்படி இல்லை என்றால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடை அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது. காது குத்திய பிறகு குறைந்தது ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் தூய தேங்காய் எண்ணெய் விட்டு வரலாம். தினமும் ஓரிரு முறை கம்மலை திருக வேண்டும் அப்படி தொடர்ந்து ஆறு மாதம் வரை திருகினால் தான் கம்மல் காதோடு ஒட்டாமல் காதில் உள்ள ஓட்டை தெளிவாக இருக்கும்.

.
மேலும்