டாஸ்மாக் கடைகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள்

By Ezhumalai

கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர, மற்ற 27 மாவட்டங்களில் நாளை முதல் (திங்கள்கிழமை) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டநெறிசலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்புவேலி கட்டாயம் வைக்கவேண்டும். 6 அடிக்கு ஒருவர் நிற்கும் வகையில் வட்டம் வரையப்பட வேண்டும். கடையின் முன்பு ஒரேநேரத்தில் ஐந்துபேர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கடைக்கு வெளியே கூட்டம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள இரண்டு பணியாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த நெறிமுறைகளை சரியாக பின்பற்றாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

.
மேலும்